districts

சாலையில் குப்பை கொட்டினால் ரூ. 100 அபராதம்

வேலூர், அக். 7- வேலூர் மாநகராட்சி பகுதிகளில், குப்பைகளை சாலையில் கொட்டுவதும், தீ வைத்து எரிப்பதும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இதனால் குப்பைகள் சேர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனை தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், மேயர் சுஜாதா, ஆணையர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில், வீடுகளில் குப்பைகளை பிரித்து வழங்காமல் இருந்தால் ரூ.100, வணிக. நிறுவனங்களுக்கு ரூ.500 வணிக வளாகங்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும், தெருக்கள், கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் காலி மனைகளில் குப்பைகளை வீட்டில் இருப்பவர்கள் கொட்டினால் ரூ.100, அதேபோல், வணிக நிறுவனங்களுக்கு ரூ.200 அபராதம் விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

;