districts

img

நடுரோட்டில் ஆட்டோவை நிறுத்தி  பயணிகளை ஏற்றக்கூடாது: போலீஸ்

வேலூர், அக். 2- வேலூர் மாநகராட்சி பகுதியில் 58 இடங்களில் ஆட்டோ ஸ்டேண்ட் உள்ளன. சுமார் 3000 ஆட்டோக்கள் ஓடுகின்றன. சில ஆட்டோக்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாக புகார் வந்தது.  இதனைத் தொடர்ந்து ஆட்டோக்களை ஒழுங்கு படுத்துவதற்காக ஆட்டோ டிரைவர்கள் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலொசனை கூட்டம் ஞாயிறன்று (அக். 2) நடைபெற்றது. போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர் முத்து குமார் பேசுகையில், வேலூர் மாநகரப் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக சில ஆட்டோ டிரைவர்கள் நடுரோட்டில் வாகனத்தை நிறுத்தி ஆட்களை ஏற்றிச் செல்வதாக தொடர்ந்து புகார் வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் வேலைக்கு செல்பவர்கள் நேர்முகத் தேர்வுக்கு செல்வர்கள் பாதிக்கப்படுவார்கள். இதற்கு நீங்கள் காரணமாக இருக்கக் கூடாது. உங்களை ஏன் நீங்களே திருத்திக்கொள்ளக் கூடாது. காவல் துறையினர் அபராதம் விதித்தால் உங்களுக்கு கஷ்டம் ஏற்படுவதாக கூறுகிறீர்கள். அதனால் உங்களை நீங்களே முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். சாலை விதிகளை முழுமையாக ஆட்டோ ஓட்டுநர்கள் கடைபிடிக்க வேண்டும். குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டும் ஓட்டுநர்களை விடவே மாட்டோம். அதேபோல் வெளியூர் ஆட்டோக்களை கொண்டு வந்து வேலூரில் ஒட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களிடம் ஆட்டோ ஓட்டுநர்கள்  கனிவாக நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுநரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்று அவர் பேசினார்.

;