விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள கங்கர் செவல்பட்டியில் மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான திவ்யா என்ற பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் கெளரி(50) என்ற பெண் உயிரிழந்தார்.
வெடி விபத்தையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.
வெடி விபத்தில் படுகாயமடைந்த 6 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.