விருதுநகர், அக்.23- விருதுநகர் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்க ளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. விருதுநகர் நகராட்சியில் 65 நிரந்தர துப்புரவுத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆண்டுதோறும் தீபாவளித் திருநாளையொட்டி அவர்களுக்கு சீருடைகள் நகராட்சி சார்பில் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலை யில், நிகழாண்டிற்கான சீருடைகளை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனீவாசன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆணையாளர் சி.ஸ்டான்லி பாபு, நகர்மன்றத் தலைவர் ஆர்.மாதவன், துணைத் தலைவர் தனலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.