திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியின் சார்பில் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து இளைஞர் நலன், விளையாட்டு மேம் பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் சனிக்கிழமையன்று திருச்சுழி தொகுதிக்குட்பட்ட காரியாபட்டியில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
பிரச்சாரத்தில் உதயநிதி பேசுகை யில், ‘‘எல்லாத் தேர்தல்களையும் போல இதுவும் ஒரு தேர்தல் அல்ல என்பதை உணர்ந்தே இந்த ஜனநாயக யுத்தத்தை நாம் தொடங்குகிறோம். இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றி ஒன்றே நமது இலக்கு. வேடமிட்டு வரும் தமிழின எதிரிகளுக்கும் - முது கெலும்பற்ற துரோகிகளுக்கும் படு தோல்வியை பரிசளிப்போம்’’ என்றார்.பிரச்சாரத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி, கே.ஆர்.ராஜ கண்ணப்பன், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராம லிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பி னர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.