districts

img

வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் சுடுமண் புகை பிடிப்பான் கண்டுபிடிப்பு

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே வைப்பாற்றின் வடகரையில் உள்ள உச்சிமேட்டில் நடைபெற்று வரும் அகழாய்வில் சுடுமண்ணால் ஆன புகை பிடிப்பான் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெம்பக்கோட்டை அருகே உள்ளது வைப்பாறு. இங்குள்ள வடகரையில் உச்சிமேட்டு பகுதியில் பழங்காலப் பொருட்கள் கிடைத்து வந்தன. இதையடுத்து, அங்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் வாழ்ந்து  வந்ததற்கான சான்றுகள் உள்ளதாக கூறப்பட்டது.

இதையடுத்து, தமிழக அரசு அங்கு 25 ஏக்கரில் அகழ்வாய்வு மேற்கொள்ள உத்தரவிட்டது. பின்பு, நடைபெற்ற அகழ்வாய்வில் சுடுமண்ணால் ஆன பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்து மணிகள், சங்கு வளையல்கள், சுடுமண் அகல் விளக்கு, யானை தந்தத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள் மற்றும் தொங்கட்டான் ஆகிய பொருட்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், சுடு மண்ணால் செய்யப்பட்ட புகை பிடிப்பான் கண்டறியப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றது.

;