districts

img

செய்தியாளர்களுடன் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த விருதுநகர் ஆட்சியர்

விருதுநகர்,மார்ச்,31- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர்  நகரா ட்சி, ஊராட்சி ஒன்றியம்  பகு திகளில் நடைபெற்று வரும்  வளர்ச்சித் திட்டப்பணிகளை  செய்தியாளர்களுடன். மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கள ஆய்வு மேற்கொண்டார். திருவில்லிபுத்தூர் அருகே பூவாணியில் உள்ள  அரசு தோட்டக்கலை பண்ணையில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து பார்வையிடப்பட்டு, அங்கு மா, கொய்யா, பப் பாளி, நெல்லி, சப்போட்டா, மாதுளை உள்ளிட்ட மரக் கன்றுகள் பல்வேறு இரகங்க ளின் தாய்ச்செடிகளாக நடவு செய்யப்பட்டு உற்பத்தி செய்தல், தாய்ச் செடிகளில் இருந்து ஒட்டு பழச்செடிகள், தக்காளி, கத்தரி மற்றும் மிள காய் ஆகிய காய்கறி குழித் தட்டு நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு அனைத்து விவ சாயிகளுக்கும் விநியோகம் செய்யப்படும் பணிகள்  குறித்து  ஆய்வு செய்தார். இதையடுத்து. இந்திரா நகரில் உள்ள  ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.18 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களையும், திருவில்லி புத்தூரில்  ரூ.150 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் எல்.பி.ஜி மின் மயான தகன மேடை அமைக்கும் பணி மற்றும்  அசோக் நகர் பகுதியில் ரூ.41 இலட்சம் மதிப்பில் நடைபெறும்  பூங்கா அமைக்கும் பணிகளையும்  ஆய்வு செய்தார். மல்லி ஊராட்சியில் மக்க ளைத் தேடி மருத்துவம் திட்டத் தில்  பயன்பெறும் பயனாளி யிடம், சிகிச்சை மற்றும் மருந்து கள் வழங்கும் முறை குறித் தும். அயன்நாச்சியார் கோவில் கிராமத்தில்  நிர்மல்  இரக உளுந்து பயிரில்  டிரோன் மூலம்  டிஏபி கரைசல் தெளித்தல் செயல்விளக்கம் குறித்தும் ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து, பிள்ளையார்குளம் ஊராட்சி யில், இலவச வீட்டுமனை பட்டாவுடன் கூடிய பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 114 பேருக்கு கட்டப்பட்டு வரும் வீடுகளை யும் செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்பு. செய்தியாளர் பயணத்தின் போது மாவட்ட ஆட்சியர்  கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 5 கட்டங்களாக  செயல் படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமங்களில் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சி மற்றும் தன்னிறைவை அடைந்திட இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமங்களில் அடிப்ப டைத் தேவைகளை நிறை வேற்றிடவும், வேளாண்மை யில் மகசூல் பெருக்கம் அடைந் திட  கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. நகராட்சிகளில் கலை ஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்  எல்.பி.ஜி மயா னம் அமைத்தல், பூங்காக்கள், நீர்நிலைகள் பாதுகாத்தல், பேருந்து நிலையம் அமைத் தல் உள்ளிட்ட பணிகளும்,  வீட்டிலிருந்து பணிபுரிவது எதிர்காலங்களில் அதிகரிக் கும் என்பதை கருத்தில் கொண்டும், வேலைநாடுப வர்கள் தங்கள் திறமைகளை வளர்க்கும் வகையிலும், அதிவேக இணையதள வச தியுடன் கூடிய அறிவுசார் மையம் அமைக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரு கிறது. மேலும் மருத்துவ உட் கட்டமைப்பை மேம்டுத்தும் வகையில் பல்வேறு புதிய கட்டிடப்பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. கர்ப்ப மடைந்த தாய்மார்களுக்கு இரத்தசோகை பாதிப்பை தடுக்கும் வகையில் நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இது போன்று வேளாண்மை, தோட் டக்கலை, ஊராட்சித்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் வளர்ச்சி மற்றும் சேவைப் பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன என்று ஆட்சியர் தெரிவித்தார். இந்த செய்தியாளர் பய ணத்தின் போது, திட்ட இயக்கு நர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி, வேளாண்மை இணை  இயக்குநர் உத்தண்டராமன், நேர்முக உதவியாளர் (விவ சாயம்) நாச்சியாரம்மாள், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், திருவி  நகராட்சி ஆணையா ளர்  ராஜமாணிக்கம்,  பொறி யாளர்   தங்கபாண்டியன்,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள்   மீனாட்சி,  சிவக்குமார்,  வட்டாட் சியர்  ரங்கசாமி ஆகியர் உட்பட பலர் பங்கேற்றனர்.

;