districts

img

நீர் உறிஞ்சும் ஆழ்துளை கிணறு: மருத்துவமனைக்கு கண்டனம்

ராணிப்பேட்டை, நவ. 10 - ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு கிராமத்தில் சிஎம்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கிளை புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் ஏற்கனவே சட்டத்திற்கு புறம்பாக 18 ஆழ்துளை கிணறுகளை அமைக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில்,பல ஆயிரம் அடி ஆழம் கொண்ட பெரிய அளவிலான (ராட்சத) ஆழ்துளை கிணறு ஒன்றை அமைக்க அனு மதி கோரியுள்ளனர். இந்த கிணறுக்கு அனுமதி கொடுத்தால் மேலக்குப்பம், நாராயணபுரம், கன்னிகாபுரம் மாங்குப்பம், கீழ்மின்னல், டிசி குப்பம், அரப்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் முற்றிலும் வற்றிப்போகும் என்பதால் பூட்டுத்தாக்கு ஊராட்சி மன்றம் நிராகரித்துவிட்டது.  இந்த நிலையில், கோட்டாட்சி யர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்திலும் கிராம மக்கள் தங்களது எதிர்ப்பு பதிவு செய்தனர். ஆனால், அதையும் மீறி ஆழ்துளை கிணறுகள் அமைக்க சிஎம்சி மருத்துவமனை நிர்வாகம் குறுக்கு வழிகளை கையாண்டு வருகிறது.  ஏற்கனவே மருத்துவ மனையை ஒட்டியுள்ள விவ சாய நிலங்கள், அரசின் நீர்வழிப்பாதைகள், கிணறுகள், ஏரி குளங்கள், வன நிலங்களை ஆக்கிரமித்துள்ள சிஎம்சி நிர்வாகம், ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதிக்கும் தீர்மானத்தை  நிறைவேற்றும் முயற்சியில் சிஎம்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது, மருத்துவமனை நிர்வாகம் ஆக்கிரமித்துள்ள நீர் நிலைகள், குளங்கள், வனநிலங்களை மீட்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தின தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கிளைச் செயலாளர் ஜி.சங்கர் தலை மையில் பூட்டுத்தாக்கு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டப் பொரு ளாளர் சி.ராதாகிருஷ்ணன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் எல்.சி.மணி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினர். சிஐடியு வேலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலை வர் என்.ரமேஷ், விவசாய தொழி லாளர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் டி.சந்திரன், பூட்டுத்தாக்கு ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சித்ரா ஜெகதீசன், பேபி பார்த்தி பன், விவசாயிகள் சங்க நிர்வாகி கள் முனுசாமி, பிரபாகரன், கருணாகரன், கதிரவன், வேல்முருகன், சீனிவாசன், சங்கர், தேவேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.