districts

img

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளம் மாணவ விஞ்ஞானி முகாம்

மதுரை, மே 21- தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் மதுரை அமெ ரிக்கன் கல்லூரி இணைந்து  நடத்தும் ‘இளம் மாணவ விஞ் ஞானி திட்டம் 2022’ அமெ ரிக்கன் கல்லூரி வளாகத்தில் வெள்ளியன்று தொடங்கியது.  இப்பயிற்சி முகாமில் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சார்ந்த  கிராமப்புற அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவி யர்கள் 80 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அமெரிக்கன் கல்லூரி விடுதியில் தங்கி,  மே 20ஆம் தேதி முதல் ஜூன்  3ஆம் தேதி வரை 15 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் கல்லூரி நிதிக் காப்  பாளர் முனைவர். சி. டாரதி ஷீலா அவர்கள் வரவேற்றார். கல்லூரி முதல்வர் - செயலர்  முனைவர் ம. தவமணி கிறிஸ் டோபர் தலைமை வகித்து பேசினார். தமிழ்நாடு அறிவி யல் தொழில்நுட்ப மையத்  தின் அறிவியல் அதிகாரி  ஐ.கே.லெனின் தமிழ்  கோவன் சிறப்புரையாற்றி னார். ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ்.ஜெமிமா பாலசெல்வி ஜுலியானா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக இளம் மாணவ மாணவியர்களிடம் மறைந்திருக்கும் அறிவியல் உணர்வை ஆராய்ந்து, அறி வியல் சிந்தனையை தூண்  டும் வகையில் பல பயிற்சி கள் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. பல்வேறு அறிவியல்  துறைகளை சார்ந்த வல்லு நர்கள், தொழில்நுட்பத்தின் சமீபத்திய அறிவியல் முன் னேற்றங்களை பற்றி எடுத்து ரைக்கிறார்கள். மேலும் யோகா, விளை யாட்டு, ஆய்வகப் பயிற்சி, வகுப்பறை விவாதம், பற வைகள் கணக்கெடுப்பு, காளான் வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல், மீன் வளர்ப்பு போன்ற சிறப்பு பயிற்சிகள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவ மாணவியர்கள் அறிவியல் ஆராய்ச்சி மையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியின் முடிவாக மாணவ மாணவியர்கள் உரு வாக்கம் செய்துள்ள ஆரா ய்ச்சி மாதிரிகள் காட்சிப் படுத்தப்படும் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

;