districts

img

உலக பாம்புக்கடி தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

விருதுநகர், செப்.19- விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் நடைபெற்ற உலக பாம்புக்கடி தின விழிப்பு ணர்வு நிகழ்ச்சியை முதல்வர் சங்குமணி துவக்கி வைத்தார்.  கண்காணிப்பாளர் அருண்குமார், மருத்துவர் அன்பு வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விபத்து மற்றும்  அவசர சிகிச்சைத்துறை தலைவர் (பொ) மல்லிகா தொகுத்து  வழங்கினார். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கல்லூரி முதல்வர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இதில் பொது மருத்துவர் சூர்யா கூறுகையில், ‘‘பாம்புக்கடியில் இருந்து மனிதர்கள் தங்களை எளிதில்  தற்காத்துக் கொள்ளலாம். பாம்பு கடித்தவுடன் பதற்றப்  படக் கூடாது. முறையான முதலுதவி சிகிச்சை தர  வேண்டும். தற்போது, அனைத்து அரசு மருத்துவமனை கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்புக் கடி மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன.  எனவே, பாம்பு ஒருவரை கடித்து விட்டால், ஒரு கணம்  கூட தாமதம் செய்யக் கூடாது. உடனடியாக முதலுதவி சிகிச்சையளித்ததும், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு கடிபட்டவரை அழைத்துச் செல்ல வேண்டும். அவ்வாறு  செய்யும் பட்சத்தில் பாம்புக்கடியால் ஏற்படும் உயிரிழப்பு கள் மற்றும் பிற பாதிப்புகளில் இருந்து எளிதில் தற்காத்துக் கொள்ளலாம்’’ என்றார்.