districts

img

மதுரை அரசு போக்குவரத்துத் தொழிலாளர் சங்க பொன்விழா -குடும்ப சங்கமம்

மதுரை, மே  27 - மதுரை அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சிஐடியு  50 ஆம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு குடும்ப சங்கம விழா  பசுமலை கோபால் சாமி  மண்டபத்தில் மே 26 வியாழனன்று நடைபெற்றது  விழாவிற்கு சங்கத்தின் துணைத் தலைவர் ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். துணைப் பொ துச்செயலாளர் எஸ்.செல்வராஜ் வரவேற்றுப் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் துவக்கி வைத்து உரையாற்றினார்.  தமுஎகச  மாநில துணைத் தலைவரும் திரைக் கலைஞரு மான ரோகிணி கலந்துரையாடினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலா ளர் மா. கணேசன் வாழ்த்திப் பேசினார். தமுஎகச கௌரவத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன் நிறை வுரையாற்றினார். சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி. கே, முரளிதரன் நன்றி கூறினார் நிகழ்ச்சியில் கலைவாணர் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி  நடைபெற்றது  கலை நிகழ்ச்சி யில் கலந்து கொண்டவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மக்களின் உணர்வோடு  இணைந்த சங்கம் 

விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் பேசு கையில்,  தோழர் வி.பி.சிந்தன் மறைந்தபோது ஒரு போக்குவரத்துத் தொழிலாளி பேருந்தில், சிஐடியு ஒரு தலைவனை இழந்து விட்டது; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தள பதியை இழந்துவிட்டது; நான் என் தகப்பனை இழந்துவிட்டேன் என எழுதினார். அவரை அணுகி கேட்டபோது , நான் திமுக-வைச் சேர்ந்தவன். ஆனால், இன்றைக்கு போக்குவரத்துத் தொழிலா ளர்கள் உரிமைக்குரல் எழுப்புகிறார்கள் என்றார் கள் அதற்கு வி.பி.சிந்தன் தான் காரணம் என்றார். இன்றைக்கு போக்குவரத்துத் தொழிலா ளர்களின் பிள்ளைகள் மருத்துவர்களாக, பொறியாளர்களாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு செங்கொடி இயக்கம்தான் காரணம். சிஐடியு சங்கம் கூலிக்காக மட்டும் குரல் கொடுக்கும் சங்கமல்ல. தன்னலம் சார்ந்த சங்க மும் அல்ல. மக்களின் உணர்வோடு இணைந்த சங்கம். எளிய மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்க ளுக்காக குரல் கொடுக்கும் சங்கம். இடதுசாரிப் பாதையில், சிஐடியு காட்டும் பாதையில் தொடர்ந்து பயணித்து போக்குவரத்துத் தொழி லாளர்கள் மக்கள் சேவையாற்ற வேண்டும். தங்க ளது உரிமைக்காகவும் குரல் கொடுக்க வேண்டும். வரும் காலங்களில் கல்வி வளர்ச்சி யில் கூடுதல் பங்களிப்பை போக்குவரத்துத் தொழிலாளர்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவ ரான எஸ்.ஏ.பெருமாள் பேசுகையில், 1973-ஆம் ஆண்டில் சங்கத்தை பதிவு செய்வதற்காக நானும்  எஸ்.மன்னார்சாமியும் நடத்திய போராட் டங்கள் ஏராளம். அன்றைக்கு ஓட்டுநருக்கு ரூ.80, நடத்துநருக்கு ரூ,85 தான் சம்பளம், படி ரூ.2, ரூ.2,50 என்ற அளவில் தான் இருந்தது. அன்றிலிருந்து இன்று நான்காம் தலைமுறை தொழிலாளர்கள் சிஐடியுவில் உறுப்பினர்களாக உள்ளனர். அன்று முதல் சிஐடியு சங்கம் தொழி லாளி வர்க்கம் என்ற தேரை இழுத்து வந்தி ருக்கிறது. இன்று தொழிலாளிகள் பெறும் சம்பளத்திற்காகவும் போராடிய பெருமை சிஐடியுவுக்கு உண்டு. 1977-ஆம் ஆண்டு போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் வெற்றி பெற்ற பத்து நாட்களுக்கு பின் நானும், மன்னார்சாமியும் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தோம். அப்போது பேருந்துகளிலிருந்து தொழிலா ளர்கள் இறங்கினார்கள், அவர்கள் அனைவரும் மொட்டை போட்டிருந்தார்கள். என்னவென்று கேட்டதற்கு திருப்பதிக்கு வருவதாக வேண்டியி ருந்தோம். போராட்டமும் வெற்றி பெற்றுவிட்டது. திருப்பதிக்கு சென்று வருகிறோம் என்றனர். கோரிக்கையை வென்றெடுத்தது சிஐடியு சங்கமா, திருப்பதி வெங்கடாசலபதியா என சிரித்துக்கொண்டே கேட்டோம். தொழிலாளிக்கு சிஐடியு மீதும் பக்தி இருக்கிறது. கடவுள் மீதும் பக்தி இருக்கிறது. அந்த பக்தி இன்றைக்கும் தொடர்கிறது என்று கூறினார். 

உதவி செய்தவர்கள் “தோழர்கள்” 

திரைக்கலைஞர் ரோகிணி பேசுகையில், சமீபத்தில் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் கொரோனா காலத்தில் தன்னலமற்று பணியாற்றி யவர், இறந்தவர்களை அடக்கம் செய்பவர், உணர்ச்சிவசத்தால் தவறிழைத்து சிறைவாசி களாக உள்ளவர்களின் குழந்தைகளை படிக்க வைப்பவர்கள் கௌரவிக்கப்பட்டனர். அந்த நிகழ்வில் பங்கேற்றவர்கள் அனைவரும் எங்க ளுக்கு உதவி செய்தவர்கள் “தோழர்கள்” என்று குறிப்பிட்டனர். விருது பெற்றவர்களுக்கு உதவி செய்தவர்கள் விருது பெறாத “தோழர்கள்”. தோழர்கள் தன்னலம் கருதாதவர்கள். திரைத்துறையோடு தொடர்புள்ள சங்கங்க ளிலும் “தோழர்கள்” உள்ளார்கள். அவர்களது பணியும் மகத்தானது. சில தருணங்களில் தமு எகச மதிப்புறு தலைவர் ச.தமிழ்ச்செல்வனிடம் நான் வழிகாட்டுதல் கேட்டுள்ளேன். வாழ்க்கைக் கான போராட்டம் இருக்கும் வரை அதற்கான வழிமுறைகளை நாம் தேட வேண்டும். அதற்கு “தோழர்கள்” பெரிதும் உதவுவார்கள். எதிர் காலத் தலைமுறை நவீனதொழில்நுட்பத்தை வளர்ச்சிக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தோழர்களோடு சேர்ந்து பயணிப் பேன் என்று தெரிவித்தார். தமுகஎகச மதிப்புறு தலைவர் ச.தமிழ்ச் செல்வன் பேசுகையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் உருவானதே மதுரை போக்குவரத்துத் தொழிலாளர் சங்க அலுவலகத்தில் தான். செம்மலர் முன்னாள் ஆசிரி யர் கே.முத்தையா ஒரு கதை பிரசுரிப்பதற்கு வந்தால், இந்தக் கதை டிரைவர், கண்டக்டருக்கு புரியுமா எனக் கேட்பார். அந்தளவிற்கு ஓட்டுநர்க ளும், நடத்துநர்களும் கதை களத்தில் கூட முக்கியப் பங்காற்றியிருக்கிறார்கள் என்றார்.

தொழிலாளர் சிரமங்களை வெளிப்படுத்திய நாடகம்

போக்குவரத்துத் தொழிலாளர்கள் ‘தலைப்புச் செய்திகள்’ என்ற பெயரில் நாடகம் ஒன்றை அரங்கேற்றினர். 30 நிமிட நாடகத்தில் போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்சனை, ஓட்டுநர், நடத்துநரை எட்டுமணி நேரத்திற்கும் மேலாக நாள் கணக்கில் கசக்கிப் பிழிவது. ஓய்வில்லாமல் பணியாற்றுவதில் தொழிலாளி ஒருவர் விபத்தில் பலியாவது, பேருந்துகளின் எண்ணிக்கை குறைப்பு, பேருந்துகளின் வழித் தடத்தை நீட்டிப்பது. இதனால் பொதுமக்கள், தொழிலாளர்கள் படும் சிரமங்களை அச்சு அசலாக வெளிப்படுத்தினர். பணிமனையில் பணி யாற்றும் தொழிலாளர்களிடம் ஹாரன் வாங்கிக்  கொடு, பல்புகள் வாங்கிக் கொடு, வெல்டிங் ராடு வாங்கிக் கொடு என போக்குவரத்து நிர்வாகம் கேட்பதையும் நாடகத்தில் வெளிப்படுத்தினர்.  இராயப்பன் பாடல்கள், கலைவாணர் கலைக்குழு நாடகங்கள் இடம்பெற்றன. இந்நிகழ்வில்  அரசுப் போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் வீ.பிச்சை, ஏ. கனகசுந்தர், பி.எம்,அழகர்சாமி,  இரா.லெனின் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினர்  பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
 

;