மதுரை, செப்.11- மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலி ருந்து ரூ.22.15 லட்சம் செல வில் முடிவுற்ற சாலை, கட்டி டப் பணிகளை சு.வெங்க டேசன் எம்.பி., மக்கள் பயன் பாட்டிற்கு ஞாயிறன்று திறந்து வைத்தார். மதுரை மாநகராட்சி 58-வது வார்டு மேலப்பொன்ன கரம் 7-ஆவது தெருவில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளூர் தொகுதி மேம் பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் செலவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அமு தம், மீனாட்சி கூட்டுறவு பண்டகசாலைகளுக்கான கட்டிடங்களை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் திறந்து வைத்தார். நிகழ்விற்கு, மாமன்ற உறுப்பினர் எம்.ஜெயராமன் தலைமை வகித்தார். இதேபோல், சுப்ரமணிய புரம் பகுதி 81-வது வார்டு பகுதியில் ரூ.7.15 லட்சம் செலவில் அமைக்கப்பட் டுள்ள பேவர் பிளாக் சாலை யை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்விற்கு, மாமன்ற உறுப்பினர் எஸ்.வி.முருகன் தலைமை வகித்தார். நிகழ்வுகளில், மாநக ராட்சி துணை மேயர் தி.நாக ராஜன், மண்டலத் தலை வர்கள் பாண்டிச்செல்வி, சுவிதா விமல், மாமன்ற உறுப்பினர் வை.ஜென்னி யம்மாள், சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜா.நரசிம்மன், எஸ்.அழ கர்சாமி, பகுதிக் குழு செய லாளர்கள் வை.ஸ்டாலின் (மத்திய - 1), ஏ.எஸ்.செந்தில் குமார் (மேற்கு 2), மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.பாண்டி, திமுக பகுதி செயலாளர் எஸ்.எஸ்.மாறன், வட்டச் செயலாளர் சீனி ரமேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.