districts

img

மேடு, பள்ளமான பழங்காவிரி சாலை சீரமைக்கப்படுமா?

மேடு, பள்ளமான பழங்காவிரி சாலை சீரமைக்கப்படுமா? மயிலாடுதுறை, டிச.16 - மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள  பழங்காவிரி சாலை (பியர்லஸ் தியேட்டர் ரோடு) கடந்த பல  மாதங்களாக மேடு, பள்ளமாகவே இருப்பதால் பேருந்து நிலையத்திற்குள் சென்று, திரும்பும் பேருந்துகள் தட்டுத் தடு மாறிச் செல்கின்றன. நகரின் முக்கிய சாலைகளான கச்சேரி ரோடு, பட்டமங்க லத்தெரு ஆகிய இரு சாலைகளையும்  இணைக்கும் சாலை யாகவும், வாகனங்கள் அனைத்தும் இச்சாலை வழியாகவே  செல்லும் நிலையிலும் சாலையை இதுவரை சீரமைக்க வில்லை. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடுமை யான சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தற்போது இச்சாலையையொட்டி நகராட்சியின் முழுக்கு  கடைகள் அமைக்கப்பட்டிருப்பதால் நாள்தோறும் கூடும் ஆயிரக்கணக்கான வாகனங்களும், இதே சாலையில் செல்வ தால் போக்குவரத்து நெரிசலும் அதிகமாகவே இருக்கிறது. மக்களின் அவதியை போக்க சாலையை உடனடியாக சீர மைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.