districts

img

ஒட்டன்சத்திரம்: மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல்

ஒட்டன்சத்திரம், ஜன.21-  ஒட்டன்சத்திரம் பகுதியில் படைப்புழு தாக்குதலால்  மக்காச்சோள  பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் கவலைய டைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம்,  இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, கள்ளிமந்தையம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிரா மப்பகுதிகளில் ஏரளமான விவசாயிகள் மக்காசோளம் பயிரிட்டுள்ள னர். முறையாக நோய் தடுப்பு மருந்து தெளித்து விதைத்த 110 நாளில்  முழுமையாக  விளைச்சல் ஏற்பட்டு அறுவடை செய்யப்படும்.  இந்த  வருடம் 100 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ. 2500 வரை விற்பனையா கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் மக்காசோளப் பயிரில் படைப்புழு தாக்குதலால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மக்காச் சோள பயிரில் படைப்புழு எதற்காக தாக்குகிறது. புழு  தாக்காமல் இருக்க என்ன மருந்து தெளிக்கவேண்டும் என்று விவசாயி களை அழைத்து பயிற்சி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.