districts

img

தோழர் ஜே.ஹேமச்சந்திரன் நினைவு நாள்

நகர்கோவில், பிப். 8- உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளுக்காக தன்னை அர்ப்பணித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜே.ஹேமச்சந்திரன் 14 ஆவது நினைவு தினம் செவ்வாயன்று (பிப்.8) எழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டது. தோழர் ஜே.ஹேமச்சந்திரனின் நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.முருகேசன், கே.மாதவன், எம்.அண்ணாதுரை, எஸ்.சி.ஸ்டாலின்தாஸ், கே.தங்கமோகன், என்.உஷாபாசி, வட்டார செயலாளர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிஐடியு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். பார்வதிபுரத்தில் உள்ள கட்சியின் மாவட்டக்குழு அலுவலகம் மற்றும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தோழர் ஜே.ஹேமச்சந்திரன் படத்திற்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. கிருஷ்ணன் கோவிலில் நாகர்கோவில்   மாநகர செயலாளர் கே. மோகன் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ஏ.உசேன், மாவட்ட குழு உறுப்பினர் அந்தோணி, மற்றும் நகர குழு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.  தக்கலை பேருந்து நிலையத்தில் படம் வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. வட்டாரக்குழு செயலாளர் சுஜா ஜாஸ்பின் தலைமை வகித்தார். வட்டாரக் குழு உறுப்பினர்கள், கட்டுமான நிர்வாகிகள், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாவட்ட நிர்வாகி காளி பிரசா‌த்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அகஸ்தீஸ்வரம் வட்டாரம் சுசீந்திரம் அக்கரை பகுதியில் தோழர் ஜே.ஹேமச்சந்திரன் நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு வட்டார செயலாளர் சிவதாணு தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர்கள் மலைவிளை பாசி, சந்திரன், வட்டாரக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இராஜாக்கமங்கலம் வட்டாரம், ஈத்தாமொழி சந்திப்பில் தோழர் ஜே.ஹேமச்சந்திரன் படத்திற்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஈத்தாமொழி கிளை செயலாளர் அருணாச்சலம் தலைமை வகித்தார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன், வட்டார செயலாளர் ராஜகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்