districts

சிபிஎம் வேட்பாளர்கள் வாக்களிப்பு

கரூர், பிப்.19 - திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கரூர் மாநகராட்சி 41  ஆவது வார்டில் போட்டியிடும் எம்.தண்டபாணி, புகழூர் நகராட்சி 22 ஆவது வார்டில் போட்டியிடும் இந்து மதி அரவிந்தன், அரவக்குறிச்சி பேரூராட்சி  1 ஆவது வார்டில் போட்டி யிடும் கே.வி.கணேசன், பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சியில் 10 ஆவது வார்டில் போட்டியிடும் தேவி நாகராஜன், நங்கவரம் பேரூராட்சி 9 ஆவது வார்டில் போட்டியிடும் சித்த ராசு ஆகியோர் அந்தந்த வார்டு பகுதி யில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தங்களது வாக்குகளை செலுத்தினர்.