districts

img

விருதுநகரில் 2 மாதங்களாக ஊதியம் இன்றி தவிக்கும் அம்மா உணவக ஊழியர்கள்

விருதுநகர், மார்ச் 15- விருதுநகரில் உள்ள இரண்டு அம்மா உணவகங்களில் பணி யாற்றும் ஊழியர்களுக்கு நக ராட்சி நிர்வாகம் கடந்த இரு மாதங் களாக ஊதியம் வழங்க வில்லை. இதன் காரணமாக ஊழி யர்கள் பெரும் அவதிக்குள்ளாகி யுள்ளனர். கடந்த 2014-ஆம் ஆண்டு விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட இரயில்வே பீடர் சாலை மற்றும் அரசு மருத்துவமனை வளாகம் ஆகிய இரு இடங்களில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. வெளியூரில் இருந்து வரும் ஏழை, எளிய மக்கள் குறைந்த செல வில் பசியாற இந்த அம்மா உண வகங்கள் பெரிதும் பயன்பட்டு வரு கின்றன. மேலும், கொரோனா நோய் பரவலையொட்டி பொது முடக்கம் அரசால் அறிவிக்கப்பட் டது. அப்போது, அம்மா உணவ கங்களில் 3 வேளையும் இலவச மாக உணவுகள் வழங்கப்பட்டு வந் தது. இப்பணியில், அம்மா உணவக ஊழியர்கள் இரவு, பகலாக சிறப் பாக பணியாற்றி பொது மக்களி டத்தில் பெரும் பாராட்டைப் பெற்றனர். அம்மா உணவகம் தொடங்கப் பட்ட காலம் முதல் அவர்களுக்கு தினக் கூலியாக ரூ.250 மட்டுமே தொடர்ந்து வழங்கப்பட்டு வரு கிறது. விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட இரு அம்மா உணவகங்க ளில் மொத்தம் 24 பெண்கள் பணி புரிந்து வருகின்றனர். கடந்த காலங்களில் ஊழி யர்களுக்கு, மாதந்தோறும் ஊதி யம் வழங்கப்பட்டு வந்தது. இந் நிலையில், கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத ஊதியம் தற்போது வரை விருதுநகர் நகராட்சி நிர்வா கத்தால் வழங்கப்படவில்லை. இதனால், அம்மா உணவக ஊழியர்கள் பெரும் கஷ்டத்தில் தவித்து வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி ஆணையாளரிடம் பல முறை தெரிவித்தும் எவ்வித நட வடிக்கையும் எடுக்கவில்லையென கூறப்படுகிறது. இதேநிலை நீடித்தால், ஊழியர்கள் தங்களது பணியை துறக்கும் நிலை ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. எனவே, தமிழக அரசானது, விருதுநகர் நகராட்சியில் பணி புரிந்து வரும் அம்மா உணவக ஊழி யர்களுக்கும் உடனடியாக ஊதி யம் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.