மதுரை, ஆக.9- ஆகஸ்ட் 9 சர்வதேச பழங்குடி தினத்தை முன் னிட்டு பழங்குடி சமூகங்க ளின் அடிப்படை மனித உரி மைகளை பாதுகாத்திட வேண்டும், பழங்குடி மக்க ளின் சமூக கல்வி, பொருளா தார, கலாச்சாரம் மேம்பாட் டினை பாதுகாத்திட வேண் டும் என்று வலியுறுத்தி புத னன்று தமிழ்நாடு அனைத்து பழங்குடிகள் பேரியக்கம், தமிழக பழங்குடி நாடோடி கள் கூட்டமைப்பு இணைந்து மதுரையில் பேரணியை நடத்தின. மதுரை தமுக்கம் மைதா னம் தமிழன்னை சிலையில் இருந்து காந்தி அருங்காட்சி யகம் வரை நடைபெற்ற பேர ணிக்கு தமிழ்நாடு அனைத்து பழங்குடிகள் பேரியக்க செயலாளர் மகேஸ்வரி தலைமை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநி லக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், வடக்கு - 2 பகு திக்குழு உறுப்பினர் எஸ். வேல் தேவா மற்றும் பல் வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .இப் பேரணி யில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்டு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பழங்குடியின மக் கள் தங்களுடைய பாரம் பரிய உடைகளுடன் நடன மாடி, பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.