திண்டுக்கல், ஏப்.20- மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி மே மாதம் 10-ஆம் தேதி திண்டுக் கல் மாவட்ட ஆட்சியர் வளா கத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்போவதாக ஒட்டன் சத்திரம் மாவட்ட மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக ளுக்கான சங்கத்தின் திண்டுக் கல் மாவட்ட 4-ஆவது மாநாடு ஒட்டன்சத்திரத்தில் ஏப்ரல் 19, 20 ஆகிய தேதிகளில் நடை பெற்றது. முதல் நாள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 2-ஆம் நாள் பிரதிநிதிகள் மாநாட் ்டிற்கு மாவட்டத் தலைவர் செல்வநாயகம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலா ளர் பகத்சிங், பொருளாளர் காளீஸ்வரி ஆகியோர் அறிக்கை களை சமர்ப்பித்து பேசினர். மாநிலத் தலைவர் ஜான்சி ராணி, பொதுச் செயலாளர் நம்புராஜன், மாநிலச் செயலாளர் ஜீவா, வெங்கடேஷ், மாவட்ட துணைத்தலைவர் ஈஸ்வரன், சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாநாட்டில், அரசின் நலத் திட்டங்கள் முறையாக சென்றிட அமைக்கப்பட்ட ஒருங்கிணை ப்புக் குழு கூட்டம் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற வில்லை. மருத்துவ மதிப்பீட்டு முகாம்களில் அடையாள அட்டை, பேருந்து மற்றும் ரயில் பாஸ் உடனடியாக வழங்கப் படவில்லை. மாவட்ட ஆட்சியர் மற்றும் சார் ஆட்சியர் தலைமை யில் நடைபெறும் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இதனை முறைப்படுத்தக்கோரி மே 10-ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடி யேறும் போராட்டம் நடத்த முடி வெடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டில், மாவட்டத் தலை வராக ஜெயந்தி, செயலாளராக பகத்சிங், பொருளாளராக காளீஸ்வரி உட்பட 11 கொண்ட மாவட்ட நிர்வாகிகளும், 25 மாவட்டக் குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.