மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாரம்பரிய மிக்க ஜல்லிக்கட்டு விழா வருடம் முழுவதும் நடத்த வசதியாக அலங்காநல்லூர் அருகில் உள்ள குட்டிமேய்க்கிபட்டி ஊராட்சிக்குட்பட்ட கீழக்கரை அருகே உள்ள மலை அடிவாரப் பகுதியில் சுமார் 65 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தினை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் திங்களன்று பார்வையிட்டனர்.