districts

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி கடன் உதவி அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்

தூத்துக்குடி, ஜூலை 2- நடப்பு ஆண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே. ஆர்.பெரியகருப்பன் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: கடந்த ஆண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடன் உள்ளிட்ட உதவிகள் வழங்கு வதற்கான இலக்கு நிர்ணயிக்கப் பட்டது.  அந்த இலக்கை தாண்டி ரூ.21 ஆயிரத்து 200 கோடி நிதி உதவி செய்யப்பட்டது. இந்த ஆண்டு  ரூ.25 ஆயிரம் கோடியை இலக்காக முதலமைச்சர் நிர்ணயித்து உள்ளார் என்று கூறினார்.  முன்னதாக, ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் அமைத்திருந்த கண் காட்சியை அமைச்சர் பெரிய கருப்பன் பார்வையிட்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் மேற்கொள் ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா (ஒட்டப்பிடாரம்), மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), ஊர்வசி அமிர்த ராஜ் (ஸ்ரீவைகுண்டம்), ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் திவ்ய தர்ஷினி உள்பட பலர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சரவணன் நன்றி கூறினார்.

;