districts

img

கொடி நாள் வசூலில் தூத்துக்குடி முதல் மாவட்டமாக வேண்டும்

தூத்துக்குடி,டிச.8 கொடி நாள் வசூலில் தூத்துக் குடி முதல் மாவட்டமாக அலுவ லர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படை வீரர் நல அலு வலகத்தின் சார்பாக கொடி நாள் தேநீர் விருந்து நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படை வீரர் கொடி  நாள் வசூலில் சிறப்பாக வசூல் புரிந்த மாவட்ட அலுவலர்க ளுக்கு தலைமைச்செயலாளரின் பாராட்டு சான்று மற்றும் வெள்ளிப்பதக்கம் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையினை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2020-ம் ஆண்டிற்கு கொடிநாள் நிதி வசூல் இலக்கு ரூ.1,08,83,000/- அரசு இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது கொரோனா தொற்று நோய் காலத்தையும் கடந்து ரூ.98,26,895/-(90.29%) வசூல் செய்யப்பட்டு அரசிற்கு செலுத்தப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி அரசு இலக்கு ரூ.7,88,000/- நிர்ணயம் செய்யப் பட்டதில் ரூ.8,02,000/-(101.77%) வசூல் செய்யப்பட்டு அரசுக்கு செலுத்தப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டிற்கு கொடி நாள் இலக்கு தூத்துக்குடி மாவட்டத்திற்கு அரசு இலக்காக ரூ.1,30,60,0000/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தூத்துக் குடி மாவட்டம் கொடி நாள் வசூலில் முன்னோடி மாவட்டங்க ளில் ஒன்றாக திகழ அடுத்து வரும் கொடி நாள் விழாவில் கொடி நாள் வசூலில் முதல் மாவட்டமாக கணக்கிட மாவட்ட அலுவலர்கள் அனைவரின் ஒத்து ழைப்பு மற்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

;