districts

img

தூத்துக்குடி மழை பாதிப்பு: முதல்வர் ஆய்வு

தூத்துக்குடி, டிச.2- தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மழை பாதிப்புகளை பார்வையிட சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அங்கிருந்து கார் மூலம் புறப்பட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்தூத்துக்குடி மாநகராட்சிக்கு உள்பட்ட பிரையண்ட்நகர் 1 ஆவது தெரு பகுதி யிலும், 6 ஆவது தெரு பகுதியிலும் மழைபாதித்த இடங்களை பார்வையிட்டார். தேங்கிய தண்ணீரில் சிறிது தொலைவு நடந்து சென்று பார்வையிட்ட அவர் தண்ணீரை உடனடி யாக வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், அந்தப் பகுதியில் திரண்டிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். தொடர்ந்து, அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட அவர் 3 ஆயிரத்துக்கும் மேற்பட் டோருக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.  ஆய்வின்போது, தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ. கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சி. சண்முகையா, திமுக மாநில பொதுக் குழு உறுப்பினர் ஜெகன் பெரிய சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.