தூத்துக்குடி,பிப். 8 தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின் னணு வாக்குப்பதிவு இயந்திரங் கள் தேர்தல் பார்வையாளர் அதுல் ஆனந்த், மாவட்ட ஆட்சி யர் செந்தில்ராஜ் தலைமையில் ஒதுக்கீடு செய்யும் பணி செவ்வாயன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இரண்டாம் நிலை சுழற்சி முறை குறித்து மாவட்ட ஆட்சியரா ல் பின்வரும் விபரங்கள் எடுத்து ரைக்கப்பட்டன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் கட்ட சுழற்சி பணியில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய் யப்பட்டு, ஒதுக்கீடு செய்யப் பட்ட கருவிகளின் விபர பட்டியல் அனைத்து அரசியல் கட்சியினருக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று, போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சி வார்டுகளுக்குரிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட பேரூராட்சிகளிலிருந்து மீள எடுத்துக் கொள்ளப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி / நகராட்சி / பேரூ ராட்சி ஆகியவற்றில் எந்தவொரு வார்டுகளிலும் 16 நபர்களுக்கு மேல் போட்டியிடவில்லை என்பதால் கூடுதலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்படாது என்ற விபரம் தெரிவிக்கப்பட்டது. மேற்கண்ட விபரங்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டு மாவட்ட தேர்தல் பார்வையா ளர் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்க ளின் இரண்டாம் நிலை சுழற்சி கணினியில் மேற்கொள்ளப் பட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்ட 6 பேரூராட்சி வார்டுகளுக்கு ரிய வாக்குப்பதிவு இயந்திர கருவிகள் சம்பந்தப்பட்ட பேரூ ராட்சிகளுக்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டிய லில் இருந்து மீள எடுக்கப்பட்ட விபரம் பிரதி எடுக்கப்பட்டு, அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் உரிய ஒப்புதல் பெறப்பட்டது. கூட்டத்தில் தூத்துக்குடி மாநக ராட்சி ஆணையர் சாருஸ்ரீ மற்றும் அனைத்து தேர்தல் நடத்தும் அலு வலர்கள், செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.