districts

img

தேனி உள்ளாட்சி இடைத்தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

தேனி, ஜூலை 9- தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற உள்  ளாட்சி இடைத்தேர்தலில் அமைதியான, விறுவிறுப்பான வாக்கு பதிவு நடைபெற்றது. மாவட்டத்தில் வடபுதுப்பட்டி ஊராட்சி தலைவர் பதவி, பெரியகுளம் நகராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி  வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 9 பதவி களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த பதவி களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 20 ஆம் தேதி  தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் பெரியகுளம் நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. வட புதுப்பட்டி, மொட்டனூத்து, ரெங்கசமுத்திரம், முத்தாலம்  பாறை, தும்மக்குண்டு ஆகிய ஊராட்சிகளின் வார்டு  உறுப்பினர் பதவிகளுக்கு தலா ஒருவர் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்ததால் அவர்கள் போட்டியின்றி தேர்வு  செய்யப்பட்டனர். வடபுதுப்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு 10 பேர்,  சின்ன ஓவுலாபுரம் ஊராட்சி 7வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேர், டி.வாடிப்பட்டி ஊராட்சி 3வது வார்டு  உறுப்பினர் பதவிக்கு 2 பேர் வேட்புமனு தாக்கல் செய்தி ருந்தனர். இந்த பதவிகளுக்கு 14 வாக்குச்சாவடிகளில் வாக்குச்சீட்டு மூலம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வடபுதுப்பட்டியில் 9,379 பேர், சின்னஓவுலாபுரத்தில் 480 பேர், டி.வாடிப்பட்டியில் 124 பேர் என 9985 வாக்கா ளர்கள் உள்ளனர். சனிக்கிழமையன்று நடைபெற்ற வாக்  குப் பதிவில் பொதுமக்கள் ஆர்வமாக வாக்களித்து சென்ற னர். பாதுகாப்பு பணியில் 250-க்கும் மேற்பட்ட போலீசார்  ஈடுபட்டனர். மாலை 5 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 75.42 சதவீதமாக இருந்தது. ஆட்சியர் ஆய்வு  பெரியகுளம் ஒன்றியம் டி.வாடிப்பட்டி ஊராட்சியில் நடைபெறும் வாக்கு பதிவு மையத்தை மாவட்ட ஆட்சி யர் க.வீ.முரளீதரன் நேரில் ஆய்வு செய்தார்.