நாகர்கோவில். பிப். 11 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வரும் பிப் 19 வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி வெள்ளியன்று தொடங்கியது. சின் னம் பொருத்தும் பணி சனிக்கிழமை நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக பிப்.12இல் பூத் சீட்டு வழங்கும் பணி தொடங்கும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் வீடுகளுக்கு சென்று பூத் சிலிப் வழங்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பூத் சீட்டு பெறாதவர்களுக்கு ஓட்டுப்பதிவு நடைபெறும் நாளில் வாக்குச்சாவடிக ளுக்கு அருகே வினியோ கம் செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளுக்கு 233 வாக்குச்சாவடிகளில் 2,44,531 வாக்காளர்களும், 4 நகராட்சிகளுக்குட்பட்ட 99 வார்டுகளுக்கு 140 வாக் குச்சாவடிகளில் 1,08,731 வாக்காளர்களும், 51 பேரூராட்சிகளுக்குட்பட்ட 828 வார்டுகளுக்கு 951 வாக்குச்சாவடிகளில் 6,71,687 வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளார்கள். மாவட்டத்தில் 1200 வாக்குசாவடி மையங்களுக்கு 20 விழுக்காடு அதிகமாக மொத்தம் 1503 வாக்குபதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்களை உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவற்றில் சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சியில் சின்னம் பொருத்தும் பணியை மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் பார்வையிட்டார்.