districts

img

கொரோனா காலத்தில் உயிரை துச்சமென மதித்து பணியாற்றியவர்களின் வேலை பறிப்பு நிர்க்கதியான நிலையில் 800 செவிலியர்கள்

மதுரை,ஏப்.7- கொரோனா காலத்தில் உயிரை  துச்சமென மதித்து முன்களப்பணி யாளர்களாக பணியாற்றிய 800 செவி லியர்களின் வேலையை பறித்து  நிர்க்கதியான நிலையில் தவிக்க விட்டுள்ளது அரசு.  கொரோனா காலத்தில் 2020 ஆம் ஆண்டில் 3,200 செவிலியர்கள் பணிய மர்த்தப்பட்டனர். தமிழகம் முழுவதும் கடந்த 22.3.2022 அன்று வெளியான அரசாணை மூலம் 800 செவிலியர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று முத லாம் அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை காலத்தில்  முன் களப்பணியாளர்களாக இருந்து தங்களது உயிரை துச்சமென மதித்துப் பணியாற்றியவர்களில் இந்த 800 பேரும் அடங்குவர். இவர்கள் அனைவரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பணியை இழந்துள்ளனர். இவர்களுடன் பணியில் சேர்ந்த சுமார் 2,400 செவிலியர்கள் நிரந்தர  ஒப்பந்த செவிலியர்களாக பணிய மர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. பணி நீக்கம் செய்யப்பட்ட 800 பேர் எதிர்காலத்தில் காலிப்பணி யிடங்கள் ஏற்படும் போது  நிரப்பப்படு வர் என நாசூக்காக வெளியே அனுப்பப் பட்டுள்ளனர். இவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட தற்கு  “தமிழக அரசின் நிதிப்பற்றாக் குறை காரணம்” எனக் கூறப்படுகிறது. பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் தனியார் முகவர்கள் மூலமோ, அல்லது மாவட்ட ஆட்சியர்கள் மூல மோ நியமனம் செய்யப்பட்டவர்கள் அல்ல.

மருத்துவ சேவைகள் ஆட் சேர்ப்பு வாரியம் ( MEDICAL SERVICES RECRUITMENT BOARD-MRB) மூலம் பணிக்குச் சேர்ந்தவர்கள். இதில் இட ஒதுக்கீடும் பின்பற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது ஆட்சி யமைத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது அரசு மருத்துவமனைகளில் காலி யாக இருக்கும் சுமார் 4.80 லட்சம் பணி யிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தெரிவித்திருந்தார். 4.80 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்புவது இருக்கட்டும். ஒரே இர வில் 800 செவிலியர்களின் வேலை  பறிக்கப்பட்டதுதான் அதிர்ச்சியளிப்ப தாய் உள்ளது. இப்பிரச்சனை குறித்து மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை செவி லியர் ஒருவர் நம்மிடம் கூறுகையில், இன்றைக்கும் அவசர சிகிச்சை பிரிவு,  சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை களில் செவிலியர் பற்றாக்குறை உள் ளது. இது மறைக்கப்படுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரு செவிலியர் தேவை.

மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட சில முக்கியமான பிரிவுகளில் 12 பேருக்கு ஒரு செவிலியர் தேவை என்றார். நிரந்தர ஒப்பந்த செவிலியர் குறித்து கேட்டதற்கு, அப்படியொன்றும் இல்லை. 2,300 செவிலியர்களுக்கும் பணி நீட்டிப்புதான் கொடுக்கப் பட்டுள்ளது. அதுவும் எவ்வளவு காலத்திற்கு என்ற வரையறையும் செய்யப்படவில்லை என்றார். மூத்த மருத்துவர் ஒருவரிடம் பேசிய போது, மருத்துவர்-நோயாளிகள் விகிதம் 1:820 என்ற அளவிலேயே உள் ளது. மருத்துவர்கள் நிலையே இப்படி என்றால் செவிலியர்கள் நிலை குறித்து சொல்லவேண்டியதில்லை என்றார். 21 மாத காலம் செவிலியர்கள் உழைப்பை “தேவைக்காக”  சுரண்டி விட்டு அவர்களை பணியிலிருந்து வெளியேற்றுவது சரியான அணுகு முறையா? இவ்வளவு பெரிய மாநி லத்தில் 800 செவிலியருக்கு வேலை வாய்ப்பளிக்க மருத்துவமனையா இல்லை  என்பதை மருத்துவத்துறை அமைச்சரின் முடிவுக்கே விட்டுவிட லாம். ஒரு செவிலியருக்கு மாதம் ஒன்று க்கு ரூ.14 ஆயிரம் தான் சம்பளம். 800 செவிலியருக்கு எவ்வளவு செலவாகி விடப்போகிறது. மக்கள் உயிர்காக்கப் போராடிய வர்கள் இன்று உரிமைக்காக குரல் கொடுக்கிறார்கள். வேலை பறிக்கப்பட்டுள்ள செவி லியர்களின் வாழ்க்கையை அஸ்தமனம் ஆக்காமல், பணியில் சேர்த்து நிரந்தரப் படுத்த வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கை. பல்வேறு மக்கள் நலத்திட்ட ங்களை செயல்படுத்தி வரும் மு.க. ஸ்டாலின் அரசு இதனைச் செய்யும்  என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்ற னர்.   -ச.நல்லேந்திரன்

;