districts

img

உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோர், மனநலம் பாதித்தவர்கள்

சின்னாளப்பட்டி, ஜன.23- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை யில் வீதி மற்றும் சாலைகளில் ஆதர வற்றோர், உறவினர்களால் கைவிடப்பட்ட முதியோர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப் பட்டோர் என பலர் உள்ளனர். இவர்கள் சாலையோரங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் வசித்து வருகின்றனர். ஞாயிறு முழு ஊரடங்கால் நிலக் கோட்டை- வத்தலக்குண்டு சாலையில் மூடப்பட்ட உணவகத்தின் முன்புறம் உள்ள குப்பைத் தொட்டிகளில், பசிக்கொடுமை யால் வாடிய மனநலம் பாதிக்கப்பட்ட இளை ஞர் ஒருவர், உணவுக்காக எச்சில் இலை களில் ஒட்டியுள்ள மிச்ச மீதமுள்ள துர் நாற்றத்துடன் கூடிய உணவுப்பொருட்களை  தேடி உண்ட சம்பவம் பார்ப்போரின் நெஞ்சை உலுக்கியது. எனவே இவர்களைக் கண்காணிக்க அரசின் சார்பில் ஊரடங்கில் தனிக் குழு அமைக்க வேண்டும். இக்குழு ஒவ் வொரு பகுதியிலும் இவர்களைப் போன்ற வர்களை கணக்கீடு செய்ய வேண்டும். இவர்களுக்கு உணவு, மருத்துவ உதவி உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்திட வேண்டும். அதற்கான நடவடிக்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலி யுறுத்தியுள்ளனர்.