districts

img

மீன்பிடித்தடைக்காலம் நிறைவு கடலுக்கு செல்ல தயாராகும் படகுகள் இந்தாண்டாவது “சிண்டிகேட்” ஒழிக்கப்படுமா?

மதுரை, ஜூன் 13- தமிழகத்தில் மீன்பிடித்  தடைக்காலம் செவ்வாய்க் கிழமை நள்ளிரவுடன் நிறைவடை வதையடுத்து இராமநாதபுரம் மாவட்டத்தில் 1,500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 10 ஆயிரம் மீன வர்கள் மீன்பிடிக்கச் செல்ல தயா ராகி வருகின்றனர். தமிழகத்தில் மீன்களின் இன பெருக்கக் காலமாகக் கருதப்படும் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல்  ஜூன் 14 வரை 61 நாள்கள் விசைப் படகுகளில் மீன்பிடிக்க செல்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தடைக்காலம் செவ்வாய்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து, இராமேஸ்வ ரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, தொண்டி, சோழியகுடி உள்  ளிட்ட பகுதிகளில் 1,500 க்கும் மேற்  பட்ட விசைப்படகுகள் தடை காலத் தின் போது படகுகளை சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தனர். தற்போது தடைக்காலம் செவ்வாய்கிழமை நிறைவடைய உள்ள நிலையில் அந்தந்த துறை முகங்களில் இருந்து 10 ஆயிரம் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல தயாராகி விட்டனர். மேலும், மீன்பிடிக்க செல்வதற்கு தேவையாக டீசல், வலைகள், உண வுப்பொருட்கள்,மற்றும் ஐஸ் கட்டி கள் வாங்கி படகுகளுக்கு கொண்டு செல்லும் பணியில் மீனவர்கள் தீவிர மாக ஈடுபட்டுள்ளனர்.  1,500 விசைப்படகுகளை நம்பி 10 ஆயிரம் மீனவர்கள் இருந்தாலும் இதன் சார்புத் தொழிலை நம்பி சுமார் 40 ஆயிரம் மீனவர்கள் உள்ளன.

சுமார் 10 ஆயிரம் நாட்டுப் படகு களை நம்பி 50 ஆயிரம் மீனவர்கள் உள்ளனர். மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைவதால் சுமார் ஒரு லட்சம் மீனவர்கள் தங்கள் பணிகளில் ஈடு பட உள்ளனர். 18 ஆயிரம் டீசலுக்கு தேவை 40 சதவீதம் மானியம் தமிழக அரசு ஒரு வருடத்திற்கு ஒரு விசைப்படகுக்கு 18 ஆயிரம் லிட்டர் டீசல் 20 சதவீத மானியத்தில் வழங்குகிறது. இந்த மானியத்தை இரு மடங்காக உயர்த்த வேண்டும்.  சிண்டிகேட் ஒழிப்பு அவசியம் இறால், வாவல், கணவாய் மீன்  கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த மீன்களை மீனவர்களிடம் இருந்து பெறுவதில் பெரிய நிறுவனங்கள் தங்களுக்  குள் சிண்டிகேட் அமைத்துக்கொள் கின்றன. இதனால் மீனவர்களுக்கு கட்டுப்படியான விலை கிடைப்ப தில்லை. இந்தாண்டு சிண்டிகேட் அமைப்பதை தமிழக அரசு தடுத்து  நிறுத்த வேண்டும். தமிழக அரசு ஏற்று மதி செய்யும் மீன்கள் பட்டியலை (சர்வேதச மீன்பட்டியலை) தினம்  தோறும் வெளியிட்டு மீனவர்களை யும் அதை நம்பியுள்ள மீன்பிடித் தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும். 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமு9றைச் சட்  டத்தை கறாராக அமல்படுத்த வேண்  டும் என்பதே மீனவர்களின் கோரிக் கையாகும்.

;