தூத்துக்குடி, பிப்.6- தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறு கிறது. இதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மெயின் ரோடு காமராஜர் சிலை அருகே திமுக மற்றும் கூட் டணி கட்சிகளின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா ஞாயிறன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்ச ருமான கீதாஜீவன் தலைமை வகித்து, தேர் தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதையடுத்து அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத நிலை இருந்தது.மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி இல்லாத நிலை இருந்தது. மக்கள் பிரதிநிதி கள் இருந்தால் மட்டும்தான் அனைத்து திட் டங்களும் மக்களுக்கு எளிதில் கிடைக்கும் என்பதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அரசு அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வரு கிறார். தமிழர்களுக்கு அரசு வேலையை உறுதி செய்தது போல இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு உருவாக்கி தந்துள்ளார். தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட முதல்வர் பெரும் முயற்சி எடுத்து வருகிறார். தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடு பட்டு வரும் முதல்வருக்கு ஆதரவு தர மக் கள் தயாராக இருக்கிறார்கள். அதனை வாக் காக மாற்றிட திமுக தொண்டர்கள் பணி செய்யவும் தயாராக இருக்கிறார்கள். கடம் பூர் பேரூராட்சியில் 55 ஆண்டுகளாக ஜன நாயக முறைப்படி தேர்தல் நடத்தாத நிலை இருந்தது. அதனை திமுக கூட்டணி கட்சி கள் முறியடித்துள்ளன. திமுக கூட்டணி சார்பில் 9 இடங்களில் போட்டியிடுகிறது. இந்தச் சூழ்நிலையில் ஒரு குடும்பத்தின் ஆதிக்கம், சதியின் காரணமாக 3 வார்டு களில் திமுக வேட்பாளர்கள் மனு தள்ளு படி செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணி கடம்பூர் பேரூராட்சியில் நிச்சயமாக வெற்றி பெறும் என்றார்.