districts

img

பாண்டிகோவில் சுங்கச்சாவடி அருகே உள்ள மைதானத்தில் நடைபெறும் விழா

மதுரை மாவட்ட அனைத்துத்துறை சார்பில் பாண்டிகோவில் சுங்கச்சாவடி அருகே உள்ள மைதானத்தில் நடைபெறும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இந்த நிகழ்வு பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி விழா நடைபெறவுள்ள  இடத்தை அமைச்சர் பி.மூர்த்தி திங்களன்று பார்வையிட்டார். உடன் ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி உள்ளிட்டோர்.