districts

img

விருதுநகர்-பகவதிபுரம் மின்மயமாக்கப்பட்ட ரயில் தடத்தில் சோதனை ஓட்டம்

விருதுநகர், மார்ச் 29- புதிதாக மின்மயமாக்கப் பட்ட விருதுநகர் - செங் கோட்டை - பகவதிபுரம் ரயில் பாதையில் புதனன்று வேக சோதனை ஓட்டம் நடைபெற்றது. கடந்த காலங்கில் டீசல்  ரயில்கள் மட்டுமே, விருது நகர்-செங்கோட்டை வழித் தடத்தில் இயக்கப்பட்டு வந் தன. இதனால், என்ஜினை மாற்றி இயக்க வேண்டிய  நிலை ஏற்பட்டது. இதன் கார ணமாக, பயணிகள் ரயில்  நிலையங்களில் காத்திருக் கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, விருது நகர் -செங்கோட்டை ரயில்  வழித் தடத்தில் மின் மய மாக்கும் பணி நடைபெற்று வந்தது.  இந்நிலையில், மின்மய மாக்கப்பட்ட விருதுநகர் - தென்காசி - செங்கோட்டை - பகவதிபுரம் வரையிலான ரயில் பாதையில் கோட்ட மேலாளர் பி.அனந்த், தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளர் ஏ.கே.சித்தார்த்தா தலைமை யில் சிறப்பு ரயில் மூலம் வேக  சோதனை ஓட்டம் நடை பெற்றது. இச்சிறப்பு ரயிலானது, புனலூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு 4.35 மணிக்கு எடமண் வந்து, பின்பு, பகவதிபுரத்தில் இருந்து 4.55 மணிக்கு வேக சோதனை தொடங்கி இரவு 8.30 மணிக்கு விருதுநகரில் நிறைவடைந்தது.  இந்த ரயில் பாதைக்குத் தேவையான மின்சாரத்தை, விருதுநகர் மற்றும் வாஞ்சி  மணியாச்சியில் உள்ள துணை மின் நிலையங்கள் மூலம் அளிக்கப்படும் என வும், மேலும் கூடுதலாக மின்  சாரம் பெற சோழபுரம் மற்றும் செங்கோட்டையில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் எடமண்-பக வதிபுரம் வரையிலான 34.677 கி.மீ மின்மயமாக்கல் பணி யானது வரும் டிசம்பர் 2023-க்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, புனலூர் - கொல்  லம் இடையேயான மின்மய மாக்கல் ஏற்கனவே முடிக்கப்  பட்டு, மார்ச் 2022 முதல்  செயல்படத் தொடங்கியுள் ளது குறிப்பிடத்தக்கது.

;