பைக் மீது வாகனம் மோதி விபத்து: வாலிபர் பலி
தூத்துக்குடி, டிச. 25 தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே யுள்ள சங்கரன் குடியிருப்பு காலனியைச் சேர்ந்தவர் சந்திர கனி மகன் அந்தோணி செல்வம் (30). இவர் சனிக்கிழமை சாத்தான்குளம் மெயின் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த ஒரு வாகனம் இவ ரது பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அந்தோணி செல்வம் தலையில் பலத்த காயம் அடைந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அந்தோணி செல்வம் மீது மோதிவிட்டு சென்ற வாக னத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
அனல்மின் நிலைய ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
தூத்துக்குடி, டிச.25- தூத்துக்குடியில் தற்காலிக பணிநீக்கம் செய்ததால் அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி முத்தையாபுரம் சுபாஷ் நகரைச் சேர்ந்த வர் கண்ணப்பன் மகன் மகாராஜன் (35), இவர் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் மதுபோதையில் இருந்ததால் நிர்வாகம் தற்காலிக பணிநீக்கம் செய்த தாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மகா ராஜன் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் ஜெய்சீலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்த மாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது
விருதுநகர், டிச.25- விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், இராம சாமியாபுரத்தைச் சேர்ந்த ஊரணியான் என்பவர் மகன் மகேஷ். இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்கு கள் உள்ளதாம். மேலும், பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி பொது அமைதியை சீர்குலைக்கும் செயல் களில் ஈடுபட்டு வருவதால், மகேஷை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சி யருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்து சிறையில் அடைக்க ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டார்.
பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கிய ஓய்வூதியர்கள்
திருநெல்வேலி, டிச.25- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29ம் தேதி மறியல் போராட்டம் நடத்த அரசு போக்குவரத்து கழக ஓய் வூதியர்கள் முடிவு செய்துள்ளனர். அரசு போக்குவரத்து கழக ஊழியர் களுக்கு கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் நிறுத்தப்பட்டுள்ள பஞ்சப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பது உட்பட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் வரும் 29ம் தேதி வண்ணார்பேட்டை பணி மனை முன் மறியல் போராட்டம் நடக்கிறது. இதுசம்பந்தமாக மக்களிடையே துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி பாளை யங்கோட்டை மார்க்கெட் பகுதியில் ரேவா பொது செயலாளர் முத்து கிருஷ்ணன் தலை மையில் நடந்தது. இதில் நிர்வாகிகள் வெங்கடா சலம், பழனி, ராஜன், அழகர், சுதந்திரம், நட ராஜன், பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
திருநெல்வேலி, டிச .25- ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டா டப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் விதமாக நடை பெறும் இந்த பண்டிகை இந்த ஆண்டு சிறப் பாக கொண்டாடப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் தேவால யங்கள், கிறிஸ்தவ சபைகளில் சனிக் கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரங்களில் சிறப்பு திருப்பலி கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற்றன. மாவட்டங்களில் கிறிஸ்தவர் களின் வீடுகள், ஆலயங்கள் ஆகியவை வண்ண, வண்ண விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்டு, பலவண்ண, பலவிதமான ஸ்டார்களை தோரணங்களாக அமைத்து, ஏசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் வித மாக சிறிய குடில்கள் முதல் ராட்சத குடில்கள் வரை அமைக்கப்பட்டிருந்தது.தேவால யங்களில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் குடும்பங்களுடன் பங்கேற்றனர். பாளையில் உள்ள மிக பழமை வாய்ந்த தேவாலயமான தூய சவே ரியர் பேராலயத்தில் சனிக்கிழமை நள்ளி ரவு பாளை மறைமாவட்ட பேராயர் அந்தோணிசாமி தலைமையில் கிறிஸ்து மஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து ஒருவருக்கொருவர் கை குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். தென்னிந்திய திருச்சபை சார்பில் பாளை முருகன்குறிச்சியில் உள்ள கதீட்ரல் ஆலயத்தில் ஞாயிறு அதிகாலை சிறப்பு ஆராதனை நடைபெற்றது. தேவ செய்திக்கு பின்பு, திருவிருந்து உபசாரம் நடைபெற்றது. முடிவில் அனை வருக்கும் கேக் வழங்கப்பட்டது. இதேபோல் பாளை சீவலப்பேரி சாலை யில் அமைந்துள்ள புனித அந்தோணி யார் ஆலயத்தில் குழந்தை இயேசுவின் சொரூ பம் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தது. சிறப்பு திருப்பலி மற்றும் ஆரா தனைக்கு பிறகு கிறிஸ்தவர்கள் அதனை பார்த்து சென்றனர். மேலப்பாளையம் தூய அந்திரேயா தேவாலயம், டக்கரம்மாள் புரத்தில் உள்ள தூய மீட்பர் ஆலயம், சாந்தி நகர் குழந்தை ஏசு ஆலயம், நெல்லை அடைக்கல அன்னை தேவாலயம், கே.டி.சி. நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா தேவாலயம், பேட்டையில் உள்ள அந்தோணியார் ஆலயங்களில் கிறிஸ்து மஸ் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற் றன.
மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை குமரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை
நாகர்கோவில், டிச.25- காற்றழுத்த தாழ்வு மண்டலம் கன்னியா குமரியை நெருங்கி வருவதையடுத்து 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் திங்களன்று (டிச.26) குமரியை நெருங்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு குமரி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராம மக்களுக்கு தெரி விக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராம மக்களுக்கு அந் தந்த பங்கு தந்தைகள் மூலமாகவும், மீனவ பிரதிநிதிகள் மூலமாகவும் தெரிவிக்கப் பட்டு உள்ளது. ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும் மீனவர்கள் கரை திரும்பு மாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். ஏற்கனவே கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி பெரும்பாலான மீனவர்கள் கரை திரும்பிய நிலையில் ஒரு சில மீனவர்கள் மட்டுமே ஆழ்கடலில் மீன் பிடித்து வரு கிறார்கள். அவர்களும் கரை திரும்புமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள். சின்னமுட்டம், குளச்சல் மீன்பிடி துறை முகங்களிலும், கடற்கரை கிராமங்களிலும் நாட்டுப்புற படகுகள் மற்றும் விசைப்பட குகளை பத்திரமாக நிறுத்தி வைக்கப்பட் டுள்ளன.
இலை கருகல் நோயால் 5 ஆயிரம் ஏக்கரில் வாழை பாதிப்பு களக்காடு விவசாயிகள் கவலை
திருநெல்வேலி, டிச.25- களக்காடு பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழைகளை இலை கரு கல் நோய் தாக்கி உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள களக்காடு பகுதியில் முக்கிய தொழி லாக விவசாயம் உள்ளது. ஆண்டுதோறும் ஆயி ரக்கணக்கான ஏக்கர் பரப்பள வில் நெல், வாழைகள் பயிர் செய்யப்பட்டு வருகிறது. நெல் சாகுபடி செய்வதை விட பணப்பயி ரான வாழைகள் சாகுபடி செய் வதையே விவசாயிகள் அதிகம் விரும்புகின்றனர். களக்காடு பகுதியில் விளையும் வாழைத் தார்களுக்கு கேரள பகுதிகளில் தனி கிராக்கி உள்ளது. இங்கு விளையும் ஏத்தன் ரக வாழைகள் சிப்ஸ் தயாரிக்க வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படு கிறது. இந்தாண்டும் விவசாயிகள் வாழைகள் பயிர் செய்தனர். தற்போது நடவு செய்யப் பட்டு 7 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், வாழைகளை இலை கரு கல் நோய் (பழுப்பு நோய்) தாக்கி வருகிறது. இந்த நோய் தாக் கிய வாழை மரங்களின் இலைகள் பழுத்து, மஞ்சள் நிறமாகி, பின்னர் கருகி விடு கிறது. இதனால் வாழைகள் முழுவதுமாக சேதமடைகிறது. இலை கருகல் நோயினால் வாழைத்தார்கள் திரட்சியாக இருக்காது என்றும் மகசூல் பாதிக்கும் என்றும் விவ சாயிகள் கூறுகின்றனர். களக்காடு சாலைப் புதூர், மாவடி திருக்குறுங்குடி, மலையடி புதூர் மற்றும் சுற்றுவட் டார பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள பல லட்சம் வாழைகள், இலை கருகல் நோயால் பாதிக்கப்பட்டு, வாடி, வதங்கி காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் ரசாயன உரங்களால் நோய் தாக்கு தல் ஏற்பட்டுள்ளதா? அல்லது மண் பாதிப் பால் இலை கருகல் நோய் ஏற்பட்டுள் ளதா? இலை கருகல் நோய் தாக்க கார ணம் என்ன என்பது தெரியாமல் விவசாயி கள் குழப்பம் அடைந்துள்ள னர். இதற்காக கடைகளில் விற்பனை செய்யப்படும் மருந்து களை வாங்கி வாழைகளுக்கு தெளித்தும் நோய் கட்டுக்குள் வர வில்லை என்றும் விவ சாயிகள் கூறுகின்றனர்.
உரக்கடைகளில் உர விலையை முறைப்படுத்த கோரிக்கை
அரியலூர், டிச.25- அரியலூர் மாவட்டம் திருமானூரில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் ஒன்றியத் தலைவர் தங்கராசு தலைமை வகித் தார். விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் வரப்பிர சாதம் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் மணிவேல், மாவட்டத் தலைவர் செந்தில்வேல் ஆகியோர் பேசினர். விவசாய விளைபொருட்களுக்கு அரசு கட்டுப்படி யான விலை வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு தட்டுப் பாடின்றி உரம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் உரக்கடைகளில் உர விலையை முறைப்படுத்தி, கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமானூர் ஒன்றிய பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை நடப்பாண்டு கூடுதலாக அமைக்க வேண்டும். கீழப்பழு வூர், கரைவெட்டி, வெங்கனூர், கோக்குடி, கண்டரா தித்தம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஏரிகளின் ஆக்கிர மிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
சட்டக் கல்லூரி அமைக்க கோரிக்கை
அரியலூர், டிச.25- அரியலூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு கூட்டம் நடை பெற்றது. கூட்டத்துக்கு, தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப் பின் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். வரும் ஆண்டுகளில் தமிழக அரசு சார்பில் அரியலூரில் நடத்தப்படும் புத்தகத் திருவிழாவில், அரியலூரில் 6 ஆண்டுகளாக புத்தகத் திருவிழா நடத்தி வரும் தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பையும், பபாசியையும் இணைத்துக் கொள்ள அரசிடம் வலியுறுத்துவது. அரியலூர் அல்லது ஜெயங்கொண்டத்தில் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வி.தொ.ச புதிய கிளை அமைப்பு
அரியலூர், டிச.25 - அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க புதிய கிளை அமைப்பு கூட்டம் உடையார்பாளையம் வடக்கு தெருவில் கிளைச் செயலாளர் எம்.விநாயகம் தலைமை யில் நடைபெற்றது. அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்க ஒன்றிய செயலாளர் சி.ரமேஷ், மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.ரவி ஆகியோர் பேசினர். இதில் கிளை யின் புதிய தலைவராக எம்.தங்கசாமி, செயலாளராக ஆர். விநாயகம், பொருளாளராக ஆர்.தங்கராசு, துணை செய லாளராக எம்.ஆறுமுகம், துணைத் தலைவராக எஸ்.ரங்க நாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இளையாளூரில் மருத்துவ முகாம்
மயிலாடுதுறை, டிச.25 - மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே யுள்ள இளையாளூர் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் அரங்கக்குடி - வடகரை ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற முகாமிற்கு செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை வகித் தார். வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்தநாதன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சம்சுதீன், ஒன்றியக் குழு உறுப்பினர் மஜினா பர்வீன்ஷேக் அலாவுதீன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் அர்ஷத் ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சுக்ரியா பர்வீன் தமிமுல்அன்சாரி வரவேற்று பேசினார். பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் மருத்துவ முகாமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசி னார். பின்னர், முகாமை பார்வையிட்டு பொதுமக்க ளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்ட றிந்தார். முகாமில் மருத்துவ குழுவினர், ரத்தப் பரிசோ தனை, ஸ்கேன், பொது மருத்துவம், இசிஜி, சித்த மருத்து வம், பல் மருத்துவம், காசநோய், தோல் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்தனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிசோதனை செய்து பயனடைந்தனர். இந்த முகாமில் இயற்கை உணவுகள், பாரம்பரிய உணவுகள், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து தரக்கூடிய உணவுகள் குறித்து விளக்கும் வகையில் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது.
மழையால் கடலை சாகுபடி பாதிப்பு
பேராவூரணி, டிச.25- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மற்றும் சேதுபாவா சத்திரம் வட்டாரத்தில் மார்கழிப் பட்டம் நிலக்கடலை சாகுபடி செய்ய முடியுமா என விவசாயிகள் எதிர்பார்த்து காத்துள்ள னர். தஞ்சாவூரில் கடந்த ஒரு மாதமாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு திசையில், இலங்கை கடற்கரையை நோக்கி நகர்வதால், தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலை யில் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதியில், ஞாயிற்றுக் கிழமை காலை முதல் மழை பெய்து வருகிறது. மதியம் சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. இதனால் வயல்வெ ளிகள், தென்னந்தோப்புகளில் தண்ணீர் தேங்கி நிற்கின்றன. அதே சமயம் சேதுபாவாசத்திரம் பகுதி விவசாயிகள் கடந்த 10 வருடங்களாக நெல் சாகுபடியை கைவிட்டு, பெரும் பாலானோர் மேட்டு நிலப் பகுதிகளில் பணப் பயிராகிய நிலக்கடலை சாகுபடியை அதிக அளவில் செய்து வந்த னர். மார்கழிப் பட்டம் நல்ல மகசூல் கிடைக்கும் என்பதால் டிசம்பர் மாதம் முதல், அதாவது கார்த்திகை, மார்கழி மாதங்க ளில் நிலக்கடலை சாகுபடி செய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தொடர்ந்து பெய்து வரும் மழையால் நிலக் கடலை சாகுபடி செய்யக்கூடிய பகுதிகள் அனைத்திலும் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. தொடர்ந்து 15 நாட்கள் வெயில் அடித்தால்தான் நிலக்கட லையை சாகுபடி செய்யும் அளவிற்கு தரையில் ஈரப்பதம் பக்குவம் அடையும். ஆனால் மழை தொடர்ந்து பெய்வதால் இந்த ஆண்டு மார்கழி பட்டம் நிலக்கடலை சாகுபடிக்கு வழி விடுமா என சேதுபாவாசத்திரம் கடைமடை விவசாயிகள் எதிர் பார்த்துள்ளனர். தற்போது பணிகளை மேற்கொண்டால், மண்ணின் ஈரத்தால் விதை கடலை அழுகிவிடும் என்பதால் விவசாயி கள் வெயிலுக்காக காத்திருக்கின்றனர்.
வெண்மணி தியாகிகள் நினைவு தின கொடியேற்ற நிகழ்ச்சி
தஞ்சாவூர், டிச.25- தஞ்சை மாவட்டம் திருவையாறு ஒன்றி யம், செந்தலை மேற்கு பகுதியில், வெண் மணி தியாகிகள் நினைவு தினத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதிய கிளை துவக்க விழா மற்றும் கொடி ஏற்று விழா, கிளைச் செயலாளர் கார்த்தி தலைமையில் நடைபெற்றது. சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா கட்சிக்கொடி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில், மூத்த தோழர்கள் எம்.பழனி அய்யா, எம்.ராம், ஒன்றியக் குழு உறுப்பினர் என்.அறி வழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை ஒன்றியம், கரம்பயத் தில் வி.ராமையன் தலைமையில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம் கொடி யேற்றி வைத்தார். வீரக்குறிச்சியில் கு.பெஞ்ச மின் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம் கொடியேற்றி வைத் தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பட்டுக் கோட்டை ஒன்றியக் குழு அலுவலகம், கரிக்காடு ஆகிய இடங்களில் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ரெ. ஞானசூரியன், சாமிநாதன், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் மகாலிங்கம், வங்கி ஊழியர் சங்கம் தனபால், சிஐடியு ராஜேந்தி ரன், கந்தசாமி மற்றும் ஆட்டோ தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர். திருவாரூர் கீழ்வெண்மணி 54 ஆம் நினைவு தினத்தை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டக் குழு அலுவலகத்தில், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் பெ.சண்முகம் நினைவு தினக் கொடியை ஏற்றினார். மாவட்ட செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி மற்றும் கட்சியின் மூத்த தோழர் எஸ்.கிருஷ்ணண், மகாலிங்கம், மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் பலர் வீர வணக்கம் செலுத்தினர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோ ஆப்டெக்சில் 30 விழுக்காடு தள்ளுபடி
தஞ்சாவூர், டிச.25 - கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து கைத் தறி ரகங்களுக்கும் 30 விழுக் காடு சிறப்பு தள்ளுபடி வழங்கி வருவதாக கோ-ஆப் டெக்ஸ் மண்டல மேலா ளர் அம்சவேணி தெரி வித்தார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப் பில், தஞ்சை மண்டல கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் கடந்த 2022 கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகையில் ரூ.384.10 லட்சம் அளவிற்கு சில்லரை விற்பனை நடை பெற்றுள்ளது. 2023 கிறிஸ் துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகைக்கு விற்பனைக்கு இலக்கு ரூ.11 கோடிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோஆப்டெக்ஸ் நிறு வனம் மாறி வரும் காலத்திற் கேற்ப வாடிக்கையாளர் களின் ரசனை அறிந்து கைத் தறி ரகங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் சிறப்புத் தள்ளுபடி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபு வனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப் புடவைகள், தலை யணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச் சீலைகள், மிதியடிகள், நைட்டிகள், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாக தருவிக்கப்பட்டு உள்ளன. மேலும், கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் கனவு நனவு அறிமுகப்படுத் தப்பட்டு 2021-2022 ஆம் ஆண்டில் 1500 வாடிக்கை யாளர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் அடைந்துள்ள னர். இத்திட்டத்தின்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 12 ஆவது மாத சந்தா தொகையை கோ ஆப் டெக்ஸ் போனஸாக வழங்கி மொத்த முதிர்வு தொகைக்கு 30 விழுக்காடு அரசு தள்ளு படியுடன் துணிகள் வழங்கப் பட்டு வருகிறது என தெரி வித்துள்ளார்.