விருதுநகர், செப்.11- 31 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தொட க்கக் கல்வி ஆசிரியர் இயக் கங்களின் கூட்டு நடவடிக்கை க்குழு சார்பில் விருதுநக ரில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத் திற்கு மாவட்டச் செயலாளர் செல்வகணேசன் தலைமை யேற்றார். தமிழக அரசானது, தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண் டும். பழைய ஓய்வு திட் டத்தை அமல்படுத்த வேண்டும், 95 சதவீத பெண் ஆசிரியர்களின் பதவிகளை பறிக்கும் அரசாணை 243 ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும், சரண்டர் விடுப்பை அனுமதித்து அதற்கும் சேர்த்து ஊதியம் வழங்கிட வேண்டும் என்று கோஷங்க ளை எழுப்பினர்.