தேனி, ஜன.5- புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு ,முதல்வர் கொடுத்த வாக்குறுதிப்படி பழைய ஓய்வூ திய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள அக விலைப்படியை வழங்க வேண்டும். சரண் விடுப்பை மீண்டும் வழங்க வேண்டும் . காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சிறப்பு கால முறை ஊதியத்தை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன வரி 5 அன்று பல்வேறு மாவட்டங்க ளில் ஜாக்டோ -ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஜாக்டோ -ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.தாஜு தீன் தலைமை வகித்தார் . அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பெ.பேயத்தேவன் துவக்கவுரை யாற்றினார். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொருளா ளர் பொ.அன்பழகன் சிறப்பு ரையாற்றினார் . அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க தலை வர் கே.துரைராஜ் நிறைவுரை யாற்றினார். 500 கும் மேற்பட்ட ஆசி ரியர், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கே.நீதிராஜன், பாபுபிரேம் குமார், பொற்செல்வன், ஜெய்கணேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் ஒருகிணைப்பாளர்கள் கே. பி. ஒ . சுரேஷ், முருகையன், ஆகியோர் பேசினர். மாநில ஒருகிணைப்பா ளர் ஆ.செல்வம் நிறைவுரையாற்றினார். தல்லாகுளம் காவல்துறை யினர் ஒலிபெருக்கி வாகனம் மற் றும் ஒலிபெருக்கி சாதனங்களை எடுத்து காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். காவல்துறை யின் அத்துமீறலைக் கண்டித்து அலுவலக வாயிலை முற்றுகை யிட்டனர். ஒலிபெருக்கி சாதனங் களை ஒப்படைப்பதாக காவல் துறையினர் கூறியதை தொடர்ந்து போராட்டம் விலகிக் கொள்ளப் பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப் பாண்டியன், இராதாகிருஷ்ணன், முத்துச்சாமி, மகேஸ்வரன், ஜோசப்சேவியர், ரவிச்சந்தின் ஆகி யோர் தலைமை வகித்தனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. திண் டுக்கல்லில் ஜாக்டோ ஜியோ நடத் திய ஆர்ப்பாட்டத்தில் ஏராளமா னோர் பங்கேற்றனர்.