districts

img

திண்டுக்கல்லில் டாஸ்மாக் ஊழியர் சங்க சம்மேளன கூட்டம்

திண்டுக்கல், ஜூலை 19- திண்டுக்கல்லில் டாஸ்மாக் ஊழியர்  சங்கத்தின் (சிஐடியு) மாநில சம்மேளனக் கூட்டம் திங்களன்று சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் பி.இராமு தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் திருச்செல்வன், பொருளாளர் சதீஸ்குமார், மாநில துணைப் பொதுச்செய லாளர்கள் கே.பி.ராமு, ஜான்பிரான்சிஸ், வேல்முருகன், மாவட்ட பொதுச்செயலா ளர் ஜே.சீனிவாசன், மாநிலக்குழு உறுப்பி னர் மா.கோபால், சிஐடியு மாநில துணைத்  தலைவர் பொன்முடி, மாவட்டச் செயலாளர்  கே.ஆர்.கணேசன், மாவட்டத் தலை வர் கே.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், 19 ஆண்டுகளாக பணி புரிந்த பணியாளர்கள் இதுவரை பணி நிரந்த ரம் செய்யவில்லை. அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.  பொது பணியிட மாறுதல் வழங்க வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மா னங்களாக நிறைவேற்றப்பட்டன. (நநி)