தேனி, டிச.27- பெரியகுளம் வட்டத்தில் அரசுக்கு சொந்தமான, முறைகேடாக பட்டா வழங்கிய நிலத்தில் அதிமுக ஒருங்கி ணைப்பாளர் ஓ .பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர் அன்னப்பிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள் ரூ 4.13 கோடி மதிப்பில் கனிமவளத்தை கொள்ளையடித்ததாக கனிம வளத் துறையினர் நடத்திய முதல் கட்ட ஆய் வில் தெரியவந்துள்ளது. பெரியகுளம் வட்டாரத்தில் அரசு நிலங்களை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமான அதிமுக ஒன்றியச் செயலாளர் அன் னப்பிரகாஷ் அவரது உறவினர்கள், அதிகாரிகள் துணையுடன் அபகரித்த தாக புகார்கள் எழுந்தன. இந்தப் புகார் கள் குறித்து பெரியகுளம் சார் ஆட்சி யர் ரிஷப் விசாரணை நடத்தினார். அதில், பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட வடவீரநாயக்கன்பட்டியில் 109 ஏக்கர் நிலத்தை அதிமுக ஒன்றி யச் செயலாளராக இருந்த அன்னபிர காஷ் மற்றும் சிலர் அபகரித்ததாக தெரியவந்தது. இந்த நிலத்தின் அரசு மதிப்பு ரூ.1 கோடியே 44 லட்சத்து 13 ஆயிரம் என கணக்கிடப்பட்டது.
தாமரைக்குளத்தில் ரூ.60 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் 60 ஏக்கர் அரசு நிலம், கெங்குவார்பட்டியில் ரூ.8 கோடியே 62 லட்சம் மதிப்பில் 13 ஏக் கர் அரசு நிலத்தையும் அதிகாரிகள் துணையுடன் சிலர் அபகரித்ததும் தெரி யவந்தது. இந்த மூன்று இடங்களிலும் சுமார் 182 ஏக்கர் அரசு நிலங்கள் அப கரிக்கப்பட்டது. மேலும் பல கோடி மதிப்பில் கனிம வளங்கள் கொள்ளை யடிக்கப்பட்டதும் தெரியவந்தது. இந்த மோசடி குறித்து பெரியகுளம் சார் ஆட்சியர் ரிஷப் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாவட்டக் குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பா ளர் சுந்தர்ராஜ் 80 நாட்களுக்கு பின் பெரி யகுளத்தில் ஆர்.டி.ஓ.க்களாக பணி யாற்றிய ஜெயப்பிரித்தா, ஆனந்தி, வட்டாட்சியர்கள் ரத்தினமாலா, கிருஷ்ணகுமார், மண்டல துணை தாசில்தார்கள் மோகன்ராம், சஞ்சீவ் காந்தி, நில அளவையர்கள் பிச்சை மணி, சக்திவேல், வடவீரநாயக்கன் பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், நில அளவையரின் உதவியாளர் அழ கர், மண்டல துணை தாசில்தாரின் உத வியாளர் ராஜேஷ்கண்ணன், நிலத்தை அபகரித்த அன்னப்பிரகாஷ், முத்து வேல்பாண்டியன், போஸ் ஆகிய 14 பேர் உட்பட பலர் மீது மாவட்டக் குற் றப்பிரிவு காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்தனர்.
ரூ.4.13 கோடி கனிமவளக் கொள்ளை
வடவீரநாயக்கன்பட்டி வருவாய் கிராமத்தில் அரசு நிலம் 109 ஏக்கர்நிலம் முறைகேடாக பட்டா பெற்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல் வத்தின் தீவிர ஆதரவாளர் அன்னப் பிரகாஷ் மற்றும் அவரது உறவினர் கள் சுமார் 80 ஏக்கரில் இருந்த குன்று களில் உள்ள கனிமவளத்தை எடுத்து நூறு கோடிக்கு மேல் விற்பனை செய் துள்ளனர். அப்பகுதி இன்று குளம் போல் காட்சி அளிக்கிறது. இது தொடர் பாக சென்னை மற்றும் தேனியிலிருந்து வந்த கனிமவள அதிகாரிகள் கனிம வளக் கொள்ளை தொடர்பாக அள வீடு செய்து பெரியகுளம் சார் ஆட்சி யருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ள னர். அந்த அறிக்கையில் ரூ 4.13 கோடி மதிப்பில் கனிமவளம் சூறையாடப் பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட் டுள்ளதாக தெரியவருகிறது. இதன் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிய பெரியகுளம் சார் ஆட்சியர் ரிஷபிற்கு ஒரு மடங்கு முதல் 15 மடங்கு வரை அப ராதம் விதிக்க அதிகாரம் இருப்பதாக கூறப்படுகிறது. அதிகபட்ச அபராதம் ரூ 64 கோடி வரை விதிக்க வாய்ப்பு உள்ளது.
உயர் அதிகாரிகள் சிக்குவார்களா?
நில மோசடி புகாருக்கு உள்ளான நிலத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு அரசு நிலத்தில் கல். மண் கொள்ளை யடிக்கப்பட்டதாக மேற்படி அதிமுக பிரமுகர் அன்னப்பிரகாஷ்க்கு ரூ.14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதே நிலத்தை சில ஆண்டுகளுக்கு பின் பல கோடி பணத்தை பெற்றுக் கொண்டு அதிகாரிகள் பட்டா கொடுத் துள்ளனர். வருவாய்த்துறையினர், கனிமவளத் துறையினர் கட்டுப்பாட் டில், கண்காணிப்பில் இருந்த நிலம் பட்டா போடுவதற்கு மாவட்ட அள விலான அதிகாரிகள் எப்படி உடந்தை யில்லாமல் இருக்க முடியும். அதே நேரத்தில் முறைகேடு ஏற்பட்ட காலத் தில் பணியாற்றிய வட்டாட்சியர் கிருஷ்ணகுமாருக்கு மீண்டும் சில ஆண்டுகள் கழித்து அதே பெரிய குளத்தில் வட்டாட்சியர் பணி வழங்கப் பட்டது என்பது பெருந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை பணிய மர்த்திய அதிகாரி மீதும், கண்கா ணிக்கத் தவறிய அப்போதைய மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலு வலர், பெரியகுளம் கோட்டாட்சியர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந் துள்ளது. அதே போல் மோசடியாக பட்டா வழங்கிய காலத்திலிருந்து, நட வடிக்கை எடுக்க வேண்டும் என தேனி அருகே அதிமுக பிரமுகரின் மகன் கொடுத்த பல புகார்களின் மீது நட வடிக்கை எடுத்திருந்தால் அரசு நிலம் மற்றும் கனிம வளம் காப்பற்றப்பட்டி ருக்கும். புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரகசிய அறிக்கை கேட்கும் அரசு
நில மோசடி நடைபெற்றபோது இருந்த வருவாய்துறை அதிகாரி கள், நில அளவைத் துறையினர், கனிம வளத்துறை அதிகாரிகள் விபரம் அடங் கிய பட்டியலை அனுப்பும்படி அரசு கேட்டுக்கொண்டுள்ளதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ரகசிய அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகக் கூறப்படுகி றது.