districts

img

கோடை விழா விளையாட்டு போட்டிகள்

திண்டுக்கல், மே 24- கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும்  விழாவையொட்டி மே 24 முதல் மே 29 வரை 6 நாட்கள்  தோட்டக்கலைத்துறை மூலமாக மலர்க்கண்காட்சியும், மே 24 முதல் ஜுன் 2ம் தேதி வரை 10 நாட்கள் சுற்றுலாத் துறை மூலமாக கோடைவிழாவும் நடத்தப்படவுள்ளது. இவ்விழாவில் 10 நாட்களும் பல்வேறு பாரம்பரிய மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய வீர விளையாட்டுகள், படகு அலங்கார அணி வகுப்பு, மீன் பிடித்தல் போட்டி. நாய்கள் கண்காட்சி போன்ற  பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மூஞ்சிக்கல் மைதானத்தில் மே 27 வாலிபால் போட்டி மே 28 இல் ஹாக்கி, மே. 29ல் கபாடி போட்டி மே 30, 31  இல் கால்பந்து போட்டிகள நடைபெறுகின்றன. ஜுன் 1 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பிரையண்ட் பார்க்கில் மினி  மாரத்தான் நடைபெறுகிறது என்று ஆட்சியர் விசாகன் அறிவித்துள்ளார்.                        (ந.நி.)