மயிலாடுதுறை, டிச.26- தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும், பெண்கள், மாணவி கள் மீதான பாலியல் வன்கொடு மைகளுக்கு எதிராகவும், கல்வி நிலையங்களில் சாதிய, மதவாத கருத்துகளை புகுத்துவதற்கு எதி ராகவும் மயிலாடுதுறையில் இந் திய மாணவர் சங்கம் சார்பில் மாபெ ரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சங்கத்தின் மாநிலத்தலைவர் ஏ.டி. கண்ணன் தலைமையில் நடை பெற்றது. 500க்கும் மேற்பட்ட மாணவர் கள் பங்கேற்ற பேரணி பொதுக்கூட் டத்தில் முன்னதாக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் அமுல்காஸ்ட்ரோ வரவேற்று பேசினார். புதுக கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன், திருச்சி மாந கர் மாவட்ட செயலாளர் கே. மோகன்குமார்,தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் எஸ்.பிரபாகரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.முன் னதாக பழைய பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செய்து துவங்கி பேரணி சின்னக்கடைவீதியில் நிறைவ டைந்து கோரிக்கை முழக்கங்களை முழங்கியவாறு பொதுக்கூட்டம் தொடங்கியது. கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பி னர் நாகைமாலி, மாநில செயலா ளர் வீ.மாரியப்பன், மாநில துணை செயலாளர் கோ.அரவிந்தசாமி, திருவாரூர் மாவட்டச் செயலாளர் இரா.ஹரிசுர்ஜித், மாணவிகள் கன்வீனர் எஸ்.கார்த்திகாதேவி ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஜெய்பீம் திரைக்காவியத்தின் உண்மைக் கதாநாயகர்களான ஏ. வழக்கறிஞர் சந்திரசேகரன், முதனை கிராமத்தின் தோழர்.ஆர். கோவிந்தன், ராசாகண்ணு மனைவி ஆர்.பார்வதி, கம்மாபுரம் சிபிஎம் முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஆர்.ராஜமோகன் ஆகியோருக்கு பாராட்டு விழாவும் கௌரவிப்பும் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலக்குழு உறுப் பினர்கள் பா.ஆனந்த், கே.சந் தோஷ், விஅர்ஜூன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.