தூத்துக்குடி, ஏப்.30- தூத்துக்குடியில் பள்ளி மாணவர்கள் வகுப்பறை மேஜைக்கு வண்ணம் தீட்டி, சீரமைத்து கொடுக்கும் பணி அனைவரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது. தமிழகத்தில் சமீப காலமாக மாணவர் சமுதாயம் குறித்து மக்கள் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவது, தாக்க முற்படு வது, இருக்கைகளை உடைப்பது, போதை வஸ்துக்களை அருந்துவது போன்ற காட்சி கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த செயல்கள் அனைத்து தரப்பின ரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், அதற்கு நேர்மாறாக தூத்துக்குடி பெருமாள்புரத்தில் உள்ள பாரதியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தங்களது செயல்பாடுகள் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளனர். இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஒன்றிணைந்து தாங்கள் பயிலும் வகுப்ப றைகளை தங்களுக்கு பின்னர் வரும் மாண வர்கள் படிப்பதற்கு ஏதுவாக வகுப்பறைச் சூழலை மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வகுப்பறை மேஜைக்கு வண்ணம் தீட்டுவது, மின்விசிறி வாங்கிக் கொடுப்பது, இருக்கைகளை சரி செய்து கொடுப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு முன் ்மாதிரியாக விளங்குகின்றனர். தங்கள் வகுப்பறையை சீரமைப்பது குறித்த முடிவை எடுத்து தலைமையாசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்து அவர்க ளின் ஒப்புதலோடு நற்செயல்களில் ஈடு பட்டுள்ளனர்.