திருநெல்வேலி ,மார்ச் 6- நெல்லை கோட்ட காப்பீட்டு ஊழியர் சங்கம் சார்பில் எல்ஐசி பங்கு விற்பனையை கண்டித்து நெல்லை வண்ணார்பேட்டை யில் தர்ணா போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு காப்பீட்டு கழக ஊழியர் சங்க கோட்டத் தலைவர் செ.முத்துக்குமாரசாமி தலைமை தாங்கினார். பொ துச்செயலாளர் பொன்னையா வரவேற்று பேசினார் தமிழக வங்கி ஊழியர் சம்மேளன பொ துச் செயலாளர் அருணாசலம் தர்ணா போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். போராட்டத் தில் சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.மோகன்,தொ.மு.ச மாநில அமைப்புச் செயலாளர் தர்மன், ஏஐடியுசி தலைவர் காசிவிஸ்வ நாதன் ,மாவட்ட செயலாளர் சடை யப்பன், எஸ்எம்எஸ் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன், அஞ்சல் ஊழியர் சங்க கோட்டை பொதுச்செயலாளர் ஜேக்கப் ராஜ், பிஎஸ்.என்.எல்.சங்க மாவட்ட செயலாளர் சூசை மரிய அந்தோணி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஆர்.மதுபால்,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பார்த்தசாரதி, சிஐடியூ நிர்வாகிகள் பெருமாள், சுடலை ராஜ், ஆர்.முருகன் உட்பட பலர் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் நிறைவு உரையாற்றினார் காப்பீட்டு கழக ஊழியர் சங்க துணைப் பொரு ளாளர் ரமேஷ் நன்றி கூறினார். போராட்டத்தில் சிபிஎம் மாநில குழு உறுப்பினர் கே.ஜி. பாஸ்கரன், சிபிஎம் 55 வது வார்டு கவுன்சிலர் முத்து சுப்பிரமணி யன், லிக்காய் கோட்ட பொதுச் செயலாளர் குழந்தைவேல் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.