districts

மதுரை முக்கிய செய்திகள்

முன்னாள் பள்ளி மாணவர்கள் சந்திப்பு

திண்டுக்கல், பிப்.2- திண்டுக்கல் நேருஜி நினைவு மாநகராட்சி மேல்நிலைப்  பள்ளியில் 1973 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு படித்த  முன்னாள் மாணவர்களின் முதல் சந்திப்பு நிகழ்ச்சி திங்க ளன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரூ.50 ஆயிரம் செல வில் 12 கரும்பலகைகள் புனரமைக்கப்பட்டு பள்ளி பயன்  பாட்டுக்காக ஒப்படைக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு, பனி ரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் எஸ்.தேவதாஸ், செயலாளர் எம்.எல்.கேசவன்,  பொருளாளர் சுந்தரவடிவேலு ஆகியோர் கலந்து கொண்ட னர்.                                  (

கொடைக்கானலில் பலத்த காற்று ஏரிச்சாலையில் மரம் விழுந்தது

திண்டுக்கல், டிச.9- கொடைக்கானலில் கடுமையான மழை பெய்து வரு கிறது. இதனால் கொடைக்கானலில் உள்ள பள்ளி கல்லூரி களுக்கு ஆட்சியர் விசாகன் விடுமுறை அறிவித்துள்ளார். அனைத்து நீர் வீழ்ச்சிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 50 கி.மீ வேகத்தில் காற்று வீசுகிறது. இத னால் ஏரிக்கரை சாலையில் உள்ள மரம் ஒன்று விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆன்-லைனில்  லாட்டரி விற்றவர் கைது

சாத்தூர், பிப்.2- சாத்தூர் பகுதியில் ஆன்-லைன் மூலம் தடை செய்யப்  பட்ட லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சாத்தூர் நகர் சார்பு ஆய்வாளர் பாண்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். சாத்தூர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் தேநீர் கடை அருகே மாரிமுத்து(32) என்ப வர் தடை செய்யப்பட்ட லாட்டரிகளை தனது செல்போனில் இருந்து விற்பனை செய்தது தெரிய வந்தது. மேலும், லாட்டரி விற்ற தொகையை வங்கி கணக்கில் வரவு  வைத்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீசார் செல்போனையும் பறி முதல் செய்தனர்.

வீட்டில் பட்டாசு  தயாரித்தவர் மீது வழக்கு

வெம்பக்கோட்டை, பிப்.2- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம்,  தாயில்பட்டியில் உள்ளது சக்திவேல்நகர். இப்பகுதி யைச் சேர்ந்தவர் சின்னப்பராஜ்(50). இவர் சட்ட விரோத மாக அரசு அனுமதியின்றி வீட்டில் வைத்து சோல்சா வெடி கள், சரவெடிகள் ஆகியவற்றை தயார் செய்தது தெரிய வந்தது. எனவே, இதுகுறித்து வெம்பக்கோட்டை வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து சின்னப்பராஜை கைது செய்தனர்.

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்  கிளை அலுவலகத்தை மதுரையில் தொடங்கிடுக!

முதல்வருக்கு ஆயக்குடி இலவச பயிற்சி மையம் கோரிக்கை

பழனி, பிப்.2-  தென்மாவட்டங்களை மையமாகக் கொண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையத்தின் கிளை அலுவல கத்தை மதுரையில் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு  கோரிக்கை மனு அனுப்பப்  பட்டுள்ளது. இதுகுறித்து ஆயக்குடி மரத்தடி இல வச பயிற்சி மையத்தின் இயக்குநர் பி.ராம மூர்த்தி அனுப்பியுள்ள மனுவில் கூறியி ருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையம், 1924 இல் ஆங்கிலேயர் ஆட்சிக்  காலத்தில் நாட்டிலேயே முதன்முதலில் ஏற்படுத்தப்பட்ட தேர்வாணையம் ஆகும்.  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் உள்ள  காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு, தேர்வுகளை நடத்தி தேர்வர்கள் அடங்கிய  பட்டியலை உரிய துறைக்கு வழங்குதல் மற்றும் இதர பல பணிகளை மேற்கொண்டு  வருகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் சென்னையில் மட்டுமே அமைந்துள்ளது. பல தேர்வுகள் மாவட்ட மையங்களில் நடைபெறுகிறது. குரூப்- 1 மெயின் தேர்வு போன்றவை சென்னையில் மட்டுமே நடை பெறுகிறது. போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலம் பதிவிறக்கம் செய்யும் முறை யை டிஎன்பிஎஸ்சி அறிமுகம் செய்தது மட்டுமே வரவேற்கத்தக்கது. ஆனால் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி தொடர்பான மற்ற பணிகளுக்கு சென்னை நோக்கியே செல்ல வேண்டி இருக்கிறது. ஒரு விண்ணப்பதாரர் ஏதாவது ஒரு பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி நியமன  ஆணை பெறுகின்ற வரை நான்கு முறை யாவது சென்னை செல்ல வேண்டிய கட்டா யம் ஏற்படுகிறது.

ஒரு விண்ணப்பதாரர் பெண்ணாக, ஆதரவற்றவராக , மாற்றுத் திறனாளியாக, சிறு குழந்தை உள்ள நிலை யில் முதல் முறையாக எழுத்துத் தேர்வில்  வெற்றி பெற்று பணி நியமனம் கிடைக்கப்  பெறுவதாக இருப்பின் குறைந்தது அவர்  களது பெற்றோர் அல்லது பாதுகாவலரு டன் சென்னை செல்ல குறைந்தது ரூ.5 ஆயி ரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை செலவு ஆகின்றது. சென்னை வந்து சிரமப்படும் மாண வர்களின் குறையை தீர்க்க, தென் மாவட்  டங்களை மையமாகக் கொண்டு மதுரை யில் கிளை அலுவலகத்தை தொடங்குவது சிறந்தது. தேர்வாணையத்தின் மதுரைக் கிளை என்பது புதிதான ஒன்றல்ல. 1984 ஆம் ஆண்டு தேர்வாணையத்தின் தலைவராக இருந்த மேஜர் மகாதேவன் மற்றும் செய லாளராக இருந்த மெய்கண்ட தேவன்  போன்றோர் முன் வைத்த தொலைநோக் கோடு கூடிய கருத்துரு முடிவு 1984 இல்  அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட் டது. அச்சமயம் தமிழ்நாடு முதல்வராக இருந்த எம்ஜிஆர் அவர்கள் உடல்நலம்  இன்மையால் இத்திட்டம் செயல்படுத்தப் படவில்லை. சுமார் 37 ஆண்டுகளுக்கு முன்  கிடப்பில் போடப்பட்ட திட்டம் அப்படியே மட்கிப் போய்விட்டது. தேர்வாணையத்தின் மதுரைக் கிளை  ஏற்படுத்தப்படுமாயின் தென் மாவட்டங்க ளில் இருந்து போட்டித் தேர்வுக்கு தயா ராகும் லட்சக்கணக்கான விண்ணப்பதாரர் கள் பயனடைவர். ஆகவே சமூக நலன் மற்றும் இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கை, ஏழை பெற்றோர்களின் குடும்ப  சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக  அரசும், டிஎன்பிஎஸ்சியும் தேர்வாணை யத்தின் மதுரைக் கிளை அலுவலகத்தை அமைக்க முன்வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கஞ்சாவுடன் இருவர் கைது

தேனி, பிப்.2- தேனி அருகே விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த இரு வரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமி ருந்து 1.300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தேனி அருகே மஞ்சிநாயக்கன்பட்டியில் உள்ள பெட்டிக்கடையில் ஜெயசந்திரன் மனைவி செல்வராணி ,போடி ஆதிபராசக்தி கோவில் தெருவை சேர்ந்த சங்கர  சுப்பிரமணி மகன் மாரிமுத்து ஆகியோர் விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்தனர் .அவர்களை கைது செய்த பழனி செட்டிபட்டி காவல்துறையினர் அவர்களிடமிருது 1.300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

வள்ளலார் நினைவு தினம்  பிப்.5-ல் மதுக்கடை மூட  அரசு உத்தரவு 

தேனி, பிப்.2- தேனி மாவட்டத்தில் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு வருகிற 5 ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடை கள், தனியார் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ள தாக மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்  குறிப்பு: தமிழக அரசு 2023-ஆண்டு 05.02.2023 அன்று வடலூர்  இராமலிங்கர் நினைவு நாள் தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடை கள், எப்.எல்-1 உரிமம் பெற்ற பார்கள் எப்.எல்-2, எப்.எல்-3, எப்.எல்-3(யு)இ எப்.எல்-3(யுயு)இ மற்றும் எப்.எல்.11  ஆகியவைகள் மூடியிருக்க வேண்டும் என்றும், அன்றைய  தினங்களில் எவ்வித மது விற்பனையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் ஆணையிட்டுள்ளது.  மேலும், மேற்காணும் நாளில் ஏதும் விதிமீறல்கள் இருப்பின் சம்பந்தப்பட்ட மதுபானக் கடைகள் மற்றும்  உரிமதாரர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 வருடம் சிறை 

திருவில்லிபுத்தூர், பிப்.2- இராஜபாளையம் அருகே உள்ள கலங்காபேரியில் வசிப்பவர் பழனிச்சாமி (வயது 62). இவர் ஜோசியம் பார்க்கும் தொழில் செய்து வருகிறார் .இவர் கடந்த 2018  ஆம் ஆண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும்  14 வயது சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்து வந்து பாலி யல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் சிறுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இது குறித்து அச்சிறுமியின் தரப்பி னர் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் தந்த புகாரின் பேரில் போலீசார் பழனிச்சாமியை கைது செய்தனர்.திருவில்லிபுத்தூரில் உள்ள சிறார் பாலி யல் குற்றத்தடுப்பு அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கினை நீதிபதி கே பூரண ஜெய ஆனந்த் குற்றம் சாட்டப்பட்ட ஜோசியர் பழனிச்சாமிக்கு 20 வருடம் சிறை தண்டனையும் ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார் இந்த வழக்கில் அரசு தரப்பில்  அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜெ கலா ஆஜரானார்.

பிப்.3, 4 இல் சதுரகிரி  கோவிலுக்கு செல்லத் தடை

திருவில்லிபுத்தூர், பிப்.2- மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பிப்ரவரி  3, 4 ஆகிய தேதி களில் சதுரகரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.   திருவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யில் உள்ள சதுரகரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் வழி பாடு நடத்துவதற்கு பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை  ஆகிய நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப் படும். அதன்படி தை மாத பவுர்ணமி வழிபாட்டிற்காக பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் 4 நாட்கள் அனுமதி அளிக்  கப்பட்டது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து பிப்ரவரி 3, 4 ஆகிய இரு நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை தடை விதித்துள்ளது.  மழையை பொறுத்து 5 மற்றும் 6 ஆம் தேதி களில் அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறி  பட்டாசு தயாரிப்பு: 3 பேர் மீது வழக்கு

சிவகாசி, பிப்.2- சிவகாசி அருகே உள்ள பெத்துலுபட்டி தனியார் பட்டாசு ஆலையில் விதிமுறைகளை மீறி பட்டாசு தயாரிப்ப தாக புகார் வந்தது. இதையடுத்து, வி.சொக்கலிங்க புரம் கிராம நிர்வாக அலுவலர் சகாயராஜ் ஜீவகன், அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதுகாப்பு  விதிமுறைகளை கடைப்பிடிக்காமல், தொழிலாளர்களை மரத்தடியில் அமர வைத்து சாட்டை, சட்டி, பேபி ராக்கெட்,  சக்கரம் ஆகிய வெடிகளை தயார் செய்தது தெரிய வந்தது. எனவே, இதுகுறித்து கிராம நிர்வாக அலுலுவர் சிவ காசி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், ஜமீன்சல்வார்பட்டியைச் சேர்ந்த பாஸ்கர், ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த முத்துக்குமார், நாரணா புரம் சாலை பர்மா காலனியைச் சேர்ந்த முனியாண்டி ஆகி யோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

17 வயது சிறுமிக்கு பெண் குழந்தை: கணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு

அருப்புக்கோட்டை, பிப்.2- அருப்புக்கோட்டை அரசு மருத்துமனையில் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. எனவே, கணவர் உட்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதவு செய்தனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள ஆவியூரைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த காரலமூர்த்தி என்பவருக்கும் 2022 ஏப்ரல் 6 இல் திருமணம் நடந்துள்ளது.  இதையடுத்து, அச்சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். எனவே, முஷ்டக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறுமியின் உடலை பரிசோதனை செய்துள்ளனர்.  பின்பு, 2023 பிப்ரவரி 1இல்அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இத்தகவலின் பேரில், அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தி னர் சிறுமியின் கணவர் காரலமூர்த்தி, அவரது உற வினர்கள் நாராயணன், மஞ்சுளா, சதாசிவம், லட்சுமி ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

கேரள வியாபாரியை தாக்கி செல்போன், பணம் பறிப்பு; இருவர் கைது

தேனி, பிப்.2-  இடுக்கி மாவட்டம் உடும்பஞ்சோலை முக்குடில் பகுதியை சேர்ந்தவர் அருண்திவாகரன்(31). இவர்  ராஜாகாட்டில் கண்காணிப்பு காமிரா மற்றும் கணினி  கடை வைத்துள்ளார். கோவையில் இருந்து தேனிக்கு  தனியார் டிராவல்ஸ் மூலம் வந்த பார்சலை எடுப்ப தற்காக தனது நண்பர் சைலத் என்பவருடன் காரில் வந்தார். பொருட்களை எடுத்துக்கொண்டு காரில் ஊர்திரும்பி கொண்டிருந்தபோது பழனிசெட்டிபட்டி தனியார் மில் அருகே காரில் முன்பக்க டயர் வெடித்தது.  இதனைதொடர்ந்து பஞ்சர் ஓட்டுவதற்கு அப்பகுதி யில் சுற்றியுள்ளனர். அப்போது அங்கு வந்த ஆட்டோ  டிரைவர் தனக்கு தெரிந்த நண்பர் இருப்பதாக கூறி 2 பேரையும் ஆடடோவில் அழைத்து சென்றுள்ளார். திடீரென கத்தியை காட்டி மிரட்டி தாக்கினர். அவர்களி டம் இருந்து செல்போன், உதிரி பாகங்கள் ஆகிய வற்றை பறித்து கொண்டனர். மேலும் ஏ.டி.எம். மையத்திற்கு அழைத்து சென்றுபணம் எடுத்து தரு மாறு மிரட்டினர். அப்போது ஆட்கள் வரவே அவர்களை விட்டுவிட்டு தப்பிஓடிவிட்டனர்.  இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வளர் ராஜேஷ்  விசாரணை நடத்தினர். அதில் இந்த சம்பவத்தில் ஈடு பட்டது பழனிசெட்டிபட்டியை சேர்ந்த கவுதம்காம்பீர்(18), கதிரேசன்(19) என தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் காயமடைந்த அருண் திவாகரை சிகிச்சைக்காக அனு மதித்தனர்.

பிப்.12 மதுரையில் சிஐடியு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் நடத்தும் மினி மராத்தான் பங்கேற்போர் பிப்.8-க்குள் முன்பதிவு செய்ய அறிவிப்பு

மதுரை, பிப்.2-  அரசு போக்குவரத்து மதுரை தொழிலா ளர் சங்கம் ( சிஐடியு ) சார்பில் சுற்றுச்  சூழலை பாதுகாப்போம் - பொதுப்போக்கு வரத்தை மேம்படுத்துவோம் என்ற மினி  மராத்தான் போட்டி வரும் பிப்ரவரி - 12 ஞாயிறு அன்று திருநகர் சீதாலெட்சுமி மேனி லைப் பள்ளியிலிருந்து பொதுப்பிரிவில் 15 வயதிற்கு மேற்பட்டோர் 8 கி. மீ. மற்றும்  பள்ளி மாணவர் - மாணவிகள் 12 வயது முதல் 18 வயது வரை 5 கி. மீ., மன்னர் திரு மலைநாயக்கர் கல்லூரியிலிருந்து காலை  6.30 மணிக்கு துவங்கும்/ போட்டி முடியும் இடம் மதுரை அரசு போக்குவரத்து தலை மையகம் பை - பாஸ் ரோடு பொதுப்பிரிவு முதல் பரிசு ரூ.10 , இரண்டாம் பரிசு ரூ .8  ஆயிரம், மூன்றாவது பரிசு ரூ.5 ஆயிரம், ஆறுதல் பரிசு 4 முதல் 10 வரை வரு பவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய். மாணவ, மாணவியர்கள் முதல் பரிசு  ரூ .6 ஆயிரம்.இரண்டாம் பரிசு ரூ. 4 ஆயி ரம், மூன்றாவது பரிசு - ரூ .2 ஆயிரம், ஆறு தல் பரிசு 4 முதல் 10 வரை வருபவர்களுக்கு தலா ரூ .500 வழங்கப்படும். அனுமதி இல வசம். இணையதள பதிவுக்கு : tnstccitumdu @gmail.com, செல் எண்: 94427 04237 முன்பதிவிற்கு கடைசி நாள் 8.2.2023.  தொடர்புக்கு வி. நம்புராஜன் - 99941 67219, பி. சேந்தன் - 9600917299, பி. பால்சாமி  - 95855 08201 குறிப்பு: பள்ளி மாணவ , மாணவியர் களுக்கு படிப்பு சான்றிதழ் அவசியம் ( BONAFIED ) CHEST NUMBER 09.02.2023 - ம் தேதி  ( பாரதியார் ரோடு , மேலப்பொன்னகரம்) சிஐடியு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள லாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு பிப்.4,5 மதுரையில் சிறப்பு முகாம்

மதுரை, பிப்.2- மதுரை மாவட்டத்தில் வாக்காளர் பட்டி யலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கான சிறப்பு முகாம் நடைபெற வுள்ளது என்று மதுரை மாவட்ட தேர்தல்  அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலை வர் மரு. எஸ்.அனீஷ் சேகர் தெரி வித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம், வாக்கா ளர் பட்டியலை செம்மைப்படுத்தும் நோக்  கில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார்  எண்ணை இணைக்கும் பணி 01.08.2022  முதல் நடைபெற்று வருகிறது. வாக்கா ளர்கள் விரும்பும் பட்சத்தில் தங்களது ஆதார் எண்ணை கீழ்க்கண்ட வழிமுறை களில் வாக்காளர் பட்டியலுடன் நேரடியாக இணைத்துக் கொள்ளலாம். அதற்காக www.nvsp.in என்ற இணையதளம் மூல மாகவும்,Voter Helpline கைப்பேசி செய லியினை பதிவிறக்கம் செய்தும், www. voterportal.eci.gov.in என்ற இணைய தளம் மூலமாகவும், நேரடியாக ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். மேலும் இப்பணிக்காக அனைத்து வாக்  குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும்  இதர தேர்தல் பணியாளர்கள் வாக்கா ளர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று ஆதார் எண்ணை பெற்று இதற் கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட படிவம் 68 அல்லது கருடா கைப்பேசி செயலி மூலமாக இணைத்திட நட வடிக்கை மேற்கொள்ளலாம். மேலும், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்கும் பணிக்கான சிறப்பு முகாம் வாக்காளர்கள் பயன்பெறும் வித மாக எதிர்வரும் சிறப்பு முகாம் எதிர்வரும் பிப்ரவரி 4 மற்றும் 5 ஆம் தேதி ஆகிய இரு தினங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது. பொது மக்கள் தங்களது ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் விப ரங்களுடன் தொடர்புடைய வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் படிவம் 6பி பூர்த்தி செய்தோ அல்லது இணைய வழியிலோ வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து பயன்பெற லாம் என்று மதுரை மாவட்ட தேர்தல் அலு வலர்-மாவட்ட ஆட்சித்தலைவர் தெரி வித்துள்ளார்.

 

 

 

 

;