திருவனந்தபுரம், மார்ச் 27- ‘நாட்டைக் காப்போம், மக்க ளைக் காப்போம்’ என்ற முழக் கத்துடன் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள 48 மணி நேர தேசிய வேலைநிறுத்தப் போராட்டம் ஞாயிறன்று நள்ளி ரவு 12 மணிக்கு தொடங்கியது. இந்த வேலை நிறுத்தம் செவ்வா யன்று (மார்ச் 29) இரவு 12 மணி வரை நடைபெறவுள்ளது. 22 தொழிற்சங்கங்கள் நடத் தும் இந்த பொது வேலை நிறுத்தத் தில் இரண்டு நாட்களும் கேரளம் ஸ்தம்பிக்கும். வாகனங்கள் நள் ளிரவு முதல் ஓடவில்லை. கடை கள் சந்தைகள் முற்றிலும் மூடப் படும். விவசாயிகள் மற்றும் விவ சாயத் தொழிலாளர் சங்கங்கள், ஒன்றிய, மாநில அரசுப் பணியா ளர் அமைப்புகள், ஆசிரியர் சங் கங்கள், பிஎஸ்என்எல், எல்ஐசி, வங்கி ஊழியர் சங்கங்கள், துறை முகத் தொழிலாளர்கள் உள் ளிட்டோர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தனியார் வாகனங்களை இயக்க விடாமலும், ரயில் பய ணத்தை தவிர்த்துவிட்டு வேலை நிறுத்தத்திற்கு பொதுமக்கள் ஒத் துழைக்க வேண்டும் என தொழிற் சங்கங்களின் கூட்டுக்குழு வேண் டுகோள் விடுத்துள்ளது. பால், செய்தித்தாள், மருத்துவமனை, ஆம்புலன்ஸ் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பயணம் ஆகியவை வேலைநிறுத்தத்திலி ருந்து விலக்கப்பட்டுள்ளன. வேலைநிறுத்தத்தை முன்னிட்டு தொழிலாளர்கள் சனிக்கிழமை யன்று (மார்ச் 26) மாநிலம் தழு விய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஜோதி ஊர்வலங்களை நடத்தி னர். வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் வேலைநிறுத்த மையங்களில் அணிதிரள்வார் கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 25 போராட்ட மையங் கள் இருக்கும். தலைநகரின் மையத்தில் 5,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முழுநேரம் நடக்கும் போராட்டத்தில் பங் கேற்பார்கள். திருவனந்தபுரம் பொதுக்கூட் டத்தை திங்களன்று காலை 11 மணிக்கு சிஐடியு பொதுச் செய லாளர் எளமரம் கரீம் எம்பி தொடங்கி வைக்கிறார். ஐஎன்டி யுசி மாநில தலைவர் ஆர்.சந்திர சேகரன் தலைமை தாங்குகிறார்.