சிவகங்கை, ஏப்.15- “தேசியத்தலைவர்” திரைப்பட படப்பிடிப்புகள் சிவகங்கை மாவட் டத்தில் நடந்துள்ளது. இந்தப் படத்தில் மானாமதுரை பிரஸ் தொண்டு நிறுவன இயக்குநர் முத்து ராமலிங்கமும் நடித்துள்ளார். விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவ ரின் வரலாறு “தேசியத்தலைவர்” என்ற பெயரில் திரைப்படமாக வரவிருக்கி றது. இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். சவுத்ரி படத்தை தயாரித்துக்கொண்டிருக்கிறார். சென்னையைச் சேர்ந்த பசீர் பசும் பொன் முத்துராமலிங்கத்தேவர் வேடத்தில் நடித்துவருகிறார். மேலும் தமது பிரஸ் தொண்டு நிறுவனம் மானாமதுரை வட்டாரத் தில் பல்வேறு சமூக சேவைகளில் ஈடு பட்டு வருகிறது என்றார் முத்து ராமலிங்கம்.