மதுரை, ஜன. 8- மதுரை எல்லீஸ் நகர் பகுதி யில் வெளியேறிய பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். மதுரை எல்லீஸ் நகர் பிரதான சாலையில் மீனாட்சி யம்மன் கோவில் வாகன காப்ப கம் சர்வோதயா சாலை அருகில் உள்ள பாதாள சாக்கடை திடீ ரென்று பொங்கி வெளியேறிய கழிவுநீர் சாலை முழுவதும் தேங்கியது. இதனால் சாலையை கடந்து செல்லும் பாதசாரிகள் கடும் அவ திக்குள்ளாகினர். பின்னர் அப்பகு திக்கு தகவல் தெரிந்து வந்த மாநகராட்சி தொழிலாளர்கள் உடனடியாக கழிவுநீர் வெளி யேறுவதை சரிசெய்தனர். ஆனால், சாலையில் தேங்கிய கழிவுநீர் அகற்றப்படாததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுக்களும் பெரும் அவதியடைந்தனர். இத னால், சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.