districts

img

தெருவோர மக்களுக்கு சேவையாற்றும் “செர்டு”

சிவகங்கை: தெருவோரங்களில் வசிக்கும் மக்களுக்கு முகவரி ஏற்படுத்தித் தரும் நிறுவனம் “செர்டு” என்கிறார் இதன் நிறுவன இயக்குநர் டாக்டர் பாண்டி போதும்பொன்னு.  இது குறித்து அவர் கூறியதாவது:-  மானாமதுரை நகரில் மழையிலும் வெயிலிலும் தெருவோரமாக வாழ்க்கை நடத்தியவர்கள் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல்  வசித்து வந்தனர். இவர்களது பிரதான் தொழில் பாம்பு பிடிப்பது தான். இவர்களை ரீடு லட்சுமிகாந்தன் ஒருங்கிணைத்தார். செர்டு தொண்டு நிறுவனம் சார்பாக அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை ,குடும்ப அட்டை  பெற்றுத் தரப்பட்டுள்ளது. எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருந்தவர்களை உயர்கல்வி வரை படிக்க வைத்து உயர் பொறுப்புக்கு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அந்தரத்தில் சாகசம் செய்து மாட்டுவண்டிக்குள் தனது வாழ்க்கையை நடத்திவரும் கழைக்கூத்தாடி மக்களுக்கும் வாழ்வாதாரம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.   குருவி பிடித்து வாழ்க்கை நடத்தும் மக்களுக்கும் வங்கியில் கடன் பெற்று  கொடுத்துள்ளோம். அவர்கள் பெற்ற கடனை முறையாகச் செலுத்தியுள்ள னர். மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி, மானாமதுரை வட்டாட்சியர் தமிழரசன் ஆகியோர் உதவியால் கழைக்கூத்தாடி மக்களுக்கு எஸ்.டி. சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பழங்குடியின மக்களின் வாழ்வா தாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு செர்டு நிறுவனம் மட்டுமல்ல சமூக ஆர்வலர்கள், லயன்ஸ் கிளப்  மற்றும் அரசு தரப்பிலும் அவர்களுக்குத்  உதவிகள் செய்துதரப்பட்டது என்றார்.