மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாடானை தாலுகா குழு சார்பில் விவசாய தொழிலாளர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் தோழர் கே.குணசேகரனின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. ஆர்.சேதுராமன் தலைமை வகித்தார். இதில், ஏ.நாகநாதன், தாலுகா குழு செயலாளர் கே.ஜெயகாந்தன், கே.ரத்தினம், வி.அருள்சாமி, கிளை செயலாளர்கள் கே.சித்திரவேலு, கே.ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.