districts

img

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வெற்றி

திருநெல்வேலி, செப். 26- நெல்லையில் சிஐடியு தூய்மைப் பணி யாளர்கள் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 3 நாட்களாக நெல்லை மாநக ராட்சியில் உள்ள 55 வார்டுகளிலும் தூய்மை  தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வந்தது. இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றதில் எந்த ஒரு முடிவு எட்டப்படாத நிலையில் 3வது நாளான திங்கட்கிழமை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு நெல்லை மாவட்ட  ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆர். மோகன் தலைமை தாங்கினார்,சி.ஐ.டியு  மாவட்ட செயலாளர் ஆர்.முருகன் . மற்றும் சங்கத்தின் செயலாளர் மாரியப்பன், பொரு ளாளர் செல்லத்துரை, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் எம்.சுடலைராஜ், நெல்லை தாலுகா செயலாளர்  நாராயணன் ,சிஐடியு துணை செயலாளர் சரவண பெருமாள்,எல் ஐ சி முகவர் சங்க கோட்ட பொதுசெயலாளர் குழந்தைவேலு, 55 ஆவது வார்டு சி.பி.எம் கவுன்சிலர் முத்து சுப்பிரமணியம் உள்ளிட்ட சிஐடியு நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்,

 மாநகராட்சி நிர்வாகம் குப்பை அள்ளும் பேட்டரி வண்டிகளுக்கு சார்ஜர் வசதி மற்றும் வேலைக்கான  உபகரணங்கள் வழங்க வேண்டும்,தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி பணம் இரண்டு கோடி செலுத்தாமல் உள்ளது. அந்த பணத்தை உடனடியாக இபிஎப் அலு வலகத்திற்கு செலுத்த வேண்டும்  போன்ற  கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.  இது சம்பந்தமாக மாநகராட்சி கமிஷனர் திருநெல்வேலி மேயர் சரவணன், துணை மேயர் ,சுகாதார அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்ற  பேச்சு வார்த்தையில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்கபட்டு எழுத்துப் பூர்வ மாக தருவதாக ஒப்புக்கொண்ட கார ணத்தால் மூன்று நாளாக நடைபெற்ற வேலை நிறுத்தம் வாபஸ் பெறபட்டு தூய்மை தொழிலாளர்கள் அனைவரும்  27.09.2022 முதல்  வேலைக்கு செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.

;