districts

விருதுநகர் ஆட்சியரக வளாகத்தில் சுத்திகரிப்பு இயந்திரம் பழுது பொதுமக்கள் அவதி

விருதுநகர், மார்ச் 29-  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  வைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்து  போனதால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்  தோறும் நடைபெறும் குறைதீர் கூட்டத்திற்கு ஏராளமான  பொதுமக்கள் வந்து செல்கின்றனர், அவர்களுக்கு தேவை யான குடிநீர் வசதி கடந்த காலங்களில் செய்து தரப்பட வில்லை, இதனால். அருகாமையில் உள்ள கடைகளில் பணம் செலவு செய்து குடிநீரை வாங்கி பருகி வந்தனர். இந்நிலையில், கடந்த 2021 அக்டோபர் 1 இல் ரூ. 9 லட்சத்து 57 ஆயிரம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்தி ரம் அப்போதைய மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டியால் திறந்து வைக்கப்பட்டது. இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்திற்கு மனுக்கள் வழங்க வரும் பொதுமக்கள் அக்குடிநீரை பருகினர். இந்த நிலையில் சுத்திகரிப்பு இயந்திரம் திடீரென பழுதாகி யுள்ளது. இதனால். அங்கு பொது மக்களுக்கு குடிநீர்  கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, மேலும். குழந்தை களுடன் வரும் தாய்மார்கள், அருகில் உள்ள கடைகளில் விலை கொடுத்து குடிநீரை வாங்கும் நிலை ஏற்பட்டுள் ளது. மேலும். பலர் குடிநீர் குழாய்களை திறந்து பார்த்து  விட்டு ஏமாற்றத்துடன் சென்று வருகின்றனர். எனவே. மாவட்ட ஆட்சியய்ர் உடனடியாக பழுத டைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்புஇயந்திரத்தை சீரமைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.

;