மதுரை, பிப்.16- திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் பரவை பேரூராட்சி 14வது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.மகாலிங்கம் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் 14 வார்டு உறுப்பினர்களுக்கு ஆதரவாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், புறநகர் மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.உமாமகேஸ்வரன், ஒன்றி யச் செயலாளர் பி.ஜீவானந்தம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.பாலகிருஷ்ணன், மலர்விழி, கே.முருகேசன், து.ராமமூர்த்தி, எம்.தனபால், செ.ஆஞ்சி, ஜெகநாதன், நாக ராஜ், மாதவன், ஜாகிர் உசேன், சரஸ்வதி, அமர்தவள்ளி, பாண்டி, லெனின், திமுக சார்பில் முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் மனோகரன், ஜெயராமன், நகரச் செய லாளர் ராஜாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.